போக்கிமான் பிரியர்களா நீங்கள்?- போக்கிமான் கோ ஃபெஸ்ட் 2021 விளையாட்டுக்கு வெகுமதி அறிவிப்பு!

|

போக்கிமான் கோ என்பது ஏஆர் மொபைல் கேம்களுடன் வரும் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். இது நியாண்டிக் உருவாக்கியது, போக்கிமான் ஜிஓ 2016 ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து மிகவும் பிரபலமாக உள்ளது. இது விளையாட்டாளர்களுக்கு நிஜ வாழ்க்கையில் போக்கிமானை சேகரிக்க வாய்ப்பளிக்கிறது என்றே கூறலாம். தற்போது இந்த விளையாட்டு அதன் 5-வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

போக்கிமான் கோ ஃபெஸ்ட் 2021 விளையாட்டுக்கு வெகுமதி அறிவிப்பு!

போக்கிமான் ஜிஓ ஃபெஸ்ட் 2021 தேதி, நேரம் குறித்து பார்க்கையில் இது ஜூலை 17 மற்றும் ஜூலை 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தியாவில் விளையாட்டாளர்கள் சிறப்பு ஆண்டு விலையாக ரூ.399 ஏஆர் விளையாட்டை அனுபவிப்பதற்கான பிரத்யேக சலுகையை வழங்குகிறது. அதேபோல் கூகுள் ப்ளேயுடன் நியான்டிக் கூட்டு சேர்ந்துள்ளதால் வெற்றியாளர்களுக்கு பல வெகுமதிகளை பெற வாய்ப்பளிக்கிறது.

வெற்றியாளர்களுக்கு மூன்று மாத யூடியூப் ப்ரீமியம் பெற வாய்ப்பளிக்கிறது. கூடுதலாக கூகுள் ப்ளே ஸ்பான்சர் பரிசை பெற தகுதியுடையவர்களாக கருதப்படுகிறார்கள். குறிப்பாக ஆண்ட்ராய்டு ப்ளேயர்கள் ஜூலை 17 அன்று போக்கிமான் ஜிஓ ஃபெஸ்ட் 2021-ன் முதல் நாள் சிறப்பு ஸ்பான்சர் பரிசுக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

போக்கிமான் கோ ஃபெஸ்ட் 2021 விளையாட்டுக்கு வெகுமதி அறிவிப்பு!

போக்கிமான் கோ ஃபெஸ்ட் 2021 விவரங்கள்

போக்கிமான் கோ ஃபெஸ்ட் 2021 விளையாட்டு பல புதிய அற்புதமான அம்சங்களை கொண்டுள்ளது. வீரர்கள் அதன் வானிலை மற்றும் ஒளி நிலைமைகள் அடிப்படையில் சரியான சூழலை அனுபவிக்க அனுமதிக்கிறது. சூப்பரான யதார்த்தமான நிகழ்நேர வான அம்சத்தை நியாண்டிக் வெளியிட்டுள்ளது. விளையாட்டாளர்கள் வரையறுக்கப்பட்ட பதிப்பில் பறக்கும் பீக்காச்சுவை 5 வடிவ பலூனுடன் பிடிக்க முடியும்.

போக்கிமான் ஜிஓ ஃபெஸ்ட் 2021 இந்தியா பயிற்சியாளர்களுக்கு சில சிறப்பு இடங்களை கொண்டுள்ளது. டிக்கெட் வைத்திருப்பவர்கள் பிரத்யேகமாக இருக்கும் குளோபல் சேலஞ்ச் பகுதியில் ஒத்துழைக்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. போக்கிமான் ஜிஇ ஃபெஸ்ட் 2021 ஒவ்வொரு மணிநேரமும் ஒரு சவாலை முடிக்க இந்திய பயிற்சியாளர்களை அனுமதிக்கிறது.

மேலும் விஷயங்களை சுவாரஸ்யமாக்க ஒரு பயிற்சியாளர் ஒரு சவாலை வேகமாக முடிக்கும்போது மீதமுள்ள நேரம் போனஸாக வழங்கப்படுகிறது. மொத்தம் 24 சவால்களை முடித்தல் வேண்டும். போக்கிமான் ஜிஇ ஃபெஸ்ட் 2021-ல் இருக்கும் உற்சாகம் மற்றும் சுவரஸ்யம் போன்றே பயனர்களை சுற்றுப்புறத்தில் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்துகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Rewards Announced For Pokemon GO Fest 2021 in Google Play

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X