டிரைவர் இல்லாமல் தெருக்களில் சுற்றும் ரோபோ டாக்ஸிகள்! கடுப்பான மக்கள் செய்த காரியம்! துவங்கியதா புரட்சி!
டிரைவர்கள் இல்லாமல் சான்பிரான்சிஸ்கோ தெருக்களில் சுற்றிவரும் ஆட்டோமேட்டிக் ரோபோ டாக்ஸி கார்களை மக்கள் முற்றுகையிட துவங்கியுள்ளனர். பொது மக்களின் தினசரி வாழ்கை முறையை இந்த ரோபோ டாக்ஸிகள் பெரிதும் தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, இந்த கிளர்ச்சி வெடித்துள்ளது.
கடுப்பான மக்கள், இப்போது சான்பிரான்சிஸ்கோ தெருக்களில் சுற்றித்திரியும் வாய்மோ (Waymo) மற்றும் க்ரூஸ் (Cruise) நிறுவனத்தின் டிரைவர்லெஸ் ஆட்டோமேட்டிக் டாக்ஸிகளை (Driverless automatic taxi) தடுத்து நிறுத்த துவங்கியுள்ளனர். ரோபோ டாக்ஸிகளுக்கும், மக்களுக்கும் இடையிலான முதல் கிளர்ச்சி இப்போது அதிரடியாக துவங்கியுள்ளது. பொது மக்களுக்கு இந்த டிரைவர்லெஸ் ஆட்டோமேட்டிக் டாக்ஸிகளால் என்ன சிக்கல் எழுந்தது?

எதனால் மக்கள் இந்த ஆளில்லா தானியங்கி டாக்ஸி கார்களை (driverless taxi San Francisco) தடுத்து நிறுத்த துவங்கியுள்ளனர்? எப்படி இந்த ரோபோ கார்கள் (Automatic robot taxi cars) ஒரு டிராஃபிக் கோன் (Traffic cone) வைத்து முற்றுகையிடுகிறார்கள்? என்ற முழு விபரத்தையும் இப்போது பார்க்கலாம். சான் பிரான்சிஸ்கோவில் ஓட்டுநர் இல்லாத டாக்சிகள் மக்கள் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிகழ்வை இப்போது விரிவாக ஆராயலாம்.
சான் ஃபிரான்சிஸ்கோ (San Francisco) நகரத் தெருக்களில் அடிக்கடி சாலை நெருக்கடியை ஏற்படுத்தும் டிரைவர் இல்லாத டாக்சிகளால் மக்கள் அசௌகரியமாக உணரத் தொடங்கியுள்ளனர். சாலையில் ஆளில்லா வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கடுப்பான பொதுமக்கள் குழு சேஃப் ஸ்ட்ரீட் ரிபேலல்ஸ் (Safe street Rebels) என்று புரட்சி படையை திரட்டி, இந்த ரோபோ டாக்ஸிகளை (Robo taxi) முற்றுகையிட துவங்கியுள்ளனர்.

இந்த டிரைவர் இல்லதாக ஆட்டோமேட்டிக் டாக்ஸி கார்களை முடக்க மக்கள் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் ட்ராஃபிக் கோன்களை டிரைவர் இல்லாத டாக்ஸிகளின் பேனட்டில் வைக்க துவங்கியுள்ளனர். இப்படி செய்கையில், டிரைவர் இல்லாத டாக்ஸிகளின் கேமராவில் கோன் மட்டும் தெரிவதினால், அவை இருக்கும் இடத்தைவிட்டு நகராமல், அப்படியே செயல்படாமல் நிற்கத்துவங்கிவிடுகின்றன.
இந்த டிரைவர்லெஸ் டாக்சிகளை மக்கள் முடக்க பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக இந்த டாக்ஸி கார்கள் நகரில் உள்ள மின்கம்பங்களை சேதப்படுத்துவது, பொதுப் பேருந்துகள் மீது மோதுவது, அவசர காலத்தில் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் செல்வது போன்ற செயல்களை மீண்டும்-மீண்டும் செய்து பொதுமக்களின் பொறுமையைக் குலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பல முறை, இது குறித்து வாய்மோ (Waymo) மற்றும் க்ரூஸ் (Cruise) நிறுவனத்திடம் புகார் அளித்தும், தக்க நடவடிக்கை எடுக்கப்படாததினால், மக்களே தெருக்களில் இறங்கி, இந்த டிரைவர்லெஸ் ஆட்டோமேட்டிக் டாக்ஸிகளை முற்றுகையிட துவங்கிவிட்டனர். மக்களே, இந்த ஆட்டோமேட்டிக் டாக்ஸிகளை வழிமறித்து, அதன் மீது டிராஃபிக் கோன்களை வைத்து முற்றுகையிடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
சான்பிரான்ஸிஸ்கொ தெருக்களில் கிளர்ச்சியாளர்கள் இந்த வாகனங்களை எப்படி டிராஃபிக் கோன் வைத்து முற்றுகையிடுகிறார்கள் என்ற வீடியோ பதிவு இப்போது டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. டிராஃபிக் கோன்களை பயன்படுத்தி இந்த டிரைவர்லெஸ் ரோபோ டாக்ஸிகளை (driverless taxi) நீங்கள் எளிமையாக "யூனிகார்ன் (Unicorn)" ஆக மாற்றலாம், என்று கேலியாக கிளர்ச்சியாளர்கள் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரையும் கிளர்ச்சியாளர் குழு இதை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்த டிரைவர்லெஸ் ஆட்டோமேட்டிக் ரோபோ டாக்ஸி கார்களை அடியோடு வெறுக்கும் மக்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக இந்த கார்களை முற்றுகையிட துடிக்கும் இளைஞர்கள் என்று பலரும் இப்போது டிராஃபிக் கோனை பயன்படுத்தி, இந்த ரோபோ டாக்ஸியை முற்றுகையிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








