Home
News

இனி நீதாண்டா பெஸ்ட் Smartwatch.. டைம் பாஸ்க்கு கைலயே கேமிங் கன்சோல்.. தெறிக்கவிட்ட Retro Gaming Watch டிசைன்..

இந்த டெக் உலகில் புதுமைகளுக்கு குறையே இல்லை. உலக கேட்ஜெட்ஸ் (Gadgets) சந்தையில் முதல் முறையாக ரெட்ரோ கேமிங் வாட்ச் (Retro Gaming Watch) சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வாட்ச்சாகவும், ஹேண்ட்ஹெல்டு கேமிங் கன்சோல்லாகவும் (Handheld Gaming Console) செய்லபடும்.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் (Start-up) நிறுவனம் ஒன்று, புதிய வடிவில் வித்தியாசமான ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனத்தை டிசைன் செய்துள்ளது. இதை மேலோட்டமாக பார்த்தால், எதோ விளையாட்டு பொம்மை வாட்ச் (Toy Watch) போல உங்களுக்கு காட்சியளிக்கிறது. ஆனால், உண்மையில் இது பல ரெட்ரோ கிளாசிக் கேம்களை (Retro Classic Games) விளையாட அனுமதிக்கும் வாட்ச் சைஸ் கேமிங் கன்சோல் (Gaming Console) ஆகும்.

இனி நீதாண்டா பெஸ்ட் Smartwatch.. டைம் பாஸ்க்கு கைலயே கேமிங் கன்சோல்..

என்னது? வாட்ச் சைஸில் கேமிங் கன்சோல்லா (Watch size gaming console)? என்று உங்களில் சிலர் ஆச்சரியத்தில் வாய் பிளந்திருப்பீர்கள். ஆம், உண்மையாகவே இதுவொரு ஸ்மார்ட்வாட்ச் + கையடக்க கேமிங் கன்சோல் சாதனம் தான். சாதாரணமான நிலையில் இது ஸ்மார்ட்வாட்ச் ஆக இருக்கிறது. ஃபிலிப் (Flip) செய்து ஓபன் செய்தால், இது ரெட்ரோ வடிவில் ஒரு கையடக்க கேமிங் கன்சோல்லாக (Retro design gaming console watch) மாறிவிடுகிறது.

ரெட்ரோ கேமிங் வாட்ச் (Retro Gaming Watch):

உண்மையை சொல்ல போனால், இது மினி கேம் பாய் SP (Mini Game Boy SP) போல செயல்படுகிறது. இந்த ரெட்ரோ கேமிங் வாட்ச் சாதனத்தை நீங்கள் வழக்கமான வாட்ச் போல உங்கள் கையில் அணிந்துகொள்ளலாம். இதை ஜேசன் ரோஜர்ஸ் (Jason Rogers) என்பவர் வடிவமைத்திருக்கிறார். இதுவொரு மாடல் வடிவமைப்பு தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ரெட்ரோ கமிங் வாட்ச் சாதனத்தை டெவலப்பர் ரெட்ரோ கேம்களை ஆதரிக்கும் சாப்ட்வேர் (Software) மற்றும் ஹார்டுவேர் (Hardware) மூலம் சிறப்பாக வடிவமைத்துளார்கள். இது வாட்ச் ஸ்ட்ராப் (Watch Strap) உடன் பிரித்தெடுக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், கேம் விளையாடும் நேரத்தில் இதை வாட்ச் ஸ்ட்ராப்பில் இருந்து பிரித்தெடுத்துக்கொள்ளலாம்.

இனி நீதாண்டா பெஸ்ட் Smartwatch.. டைம் பாஸ்க்கு கைலயே கேமிங் கன்சோல்..

ரெட்ரோ கேமிங் வாட்ச் சிறப்பம்சம் (Retro Gaming Watch Specifications):

இது 1.54 இன்ச் 320 x 320 பிக்சல் கொண்ட LCD டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது 60Hz ரெஃப்ரஷ் ரேட்டை (Refresh rate) ஆதரிக்கிறது. அதேபோல், கேம்களை விளையாட D-Pad உடன் தேவையான ஆக்ஷன் பட்டன்களையும் (Action buttons), ஆசிலேரோமீட்டர் (accelerometer), இன்பில்ட் ஸ்பீக்கர் (in-build speaker) அம்சங்களை இந்த ரெட்ரோ கேமிங் வாட்ச் சாதனம் கொண்டுள்ளது.

இது 1.5MB இன்டெர்னல் மெமரி உடன் 8MB எக்ஸ்டெர்னல் QSPI ரேம் அம்சத்தை கொண்டுள்ளது. இது ரினிசஸ் டைலாக் DA14706 சிப் (Renesas/ Dialog DA14706 chip) உடன் 2 ARM கோர்ட்டெக்ஸ் MD பிராசஸர் சென்சார் மற்றும் ப்ளூடூத் அம்சத்துடன் இயங்குகிறது. இது எபினிக்ஸ் (Efinix T20 FPGA) அம்சத்தை கொண்டுள்ளது. இது உங்களை கஸ்டம் வீடியோ கேம்களை உருவாக்க (reate custom video game hardware) அனுமதிக்கிறது.

இந்த ரேடியோ கேமிங் வாட்ச் சாதனம் 8 பிட் (8-bit) மற்றும் 16 பிட் கேம்களை விளையாட (16-bit game console) அனுமதிக்கிறது. இந்த சாதனம் வெறும் ஸ்மார்ட்வாட்ச் ஆக பயன்படுத்தப்படும் பொழுது 2 நாள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. கமிங் கன்சோல் ஆக பயன்படுத்தும் பொழுது 2 முதல் 4 மணிநேர பிளே நேரத்தை வழங்குகிறது. இது 159 டாலர் விலையுடன் நவம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Retro Gaming Watch New Gadget Performs As Mini Gaming Handheld Console and Smartwatch Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X