மொபைலா, சாப்பாடா?-ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க!

Posted By: Karthikeyan
மொபைலா, சாப்பாடா?-ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க!

இந்த அவசர யுகத்தில் பலர் எப்போதுமே மொபைலும் கையுமாக இருக்கிறார்கள். தூங்கும் போதுகூட மொபைலில் பாட்டும், காதுகளில் இயர் போனுமாக இருக்கிறார்கள். சாப்பிடும் போது கூட மொபைலில் இருக்கும் கவனம் சாப்பாட்டில் இருப்பதில்லை. அதனால் என்ன சாப்பிட்டோம் என்பதுகூட நினைவில் இருப்பதில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஈவா என்ற ஒரு நட்சத்திர ஹோட்டல் ஒரு வினோதமாக வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது. அதாவது அந்த ஹோட்டலில் சாப்பிடப் போகும் போது மொபைலை ஓட்டல் நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு சென்றால் அவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியை வழங்கியிருக்கிறது.

இவ்வாறு சாப்பிடும் போது மொபைலை பயன்படுத்தாமல் இருந்தால் சாப்பாட்டை ரசித்து சாப்பிட முடியும். அருகில் அமர்ந்து சாப்பிடுவோருடன் நட்பு பாராட்ட முடியும். மேலும் பரிமாறுபவர்களையும் கவனிக்க முடியும் என்று அந்த ஓட்டல் நிர்வாகம் கருதுகிறது.

குறிப்பாக ஹோட்டலில் சாப்பிடும் போது மொபைலைப் பயன்படுத்தாமல் இருந்தால் அருகில் இருப்போருடன் நட்பை ஏற்படுத்த முடியும் என்று அந்த ஓட்டலின் உரிமையாளர் மார்க் கோல்டு தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த தள்ளுபடியால் பலர் தங்களது மொபைல்களை ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வதாகவும் அதன் மூலம் அவர்கள் மற்றவர்களோடு நட்பு பாராட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நல்ல யோசனைதான்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot