ட்யூரிங் விலைப்பட்டியல் வெளியானது..!
உடைக்க முடியாத, தண்ணீரில் வைத்தாலும் எதுவும் ஆகாத ஸ்மார்ட்போனான ட்யூரிங் விலையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்பதிவு செய்வது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை என்றாலும் வாங்க விருப்பமுள்ளவர்கள் கருவியை ரிசர்வ் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்யூரிங் போன் மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஃவுல்ஃப், ஃபாரோஹ் மற்றும் கார்டினல் என மூன்று நிறங்களும் 16, 64 மற்றும் 128 ஜிபி மெமரி வகைகளில் கிடைக்கும் இவைகளின் விலை முறையே ரூ.39,000, ரூ.47,300 மற்றும் ரூ.55,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறம், மெமரி ஆப்ஷன் போன்றவற்றை குறிப்பிட்ட பின் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து போனினை ரிசர்வ் செய்யலாம்.

5.5 இன்ச் ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி போர்ட் மற்றும் ஹெட்போன் ஜாக் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 கொண்டு இயங்கும் இந்த கருவியில் அமைத் யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாபு்டிராகன் 801 எஸ்ஓசி, 3ஜிபி ரேம், 13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ், 8 எம்பி முன்பக்க கேமரா, 4ஜி, எல்டிஈ, வை-பை 802.11ஏசி, ப்ளூடூத் 4.0, என்எப்சி மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications