கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.! அதிரடி மாற்றங்கள்.!
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகள் மூலமான ஆட்டோ டெபிட் முறையில் ரிசர்வ் வங்கி பல மாற்றங்களை அறிவித்துள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது ஓடிடி, டிஷ் டிவி, செல்போன் ரீசார்ஜ் என ஒவ்வொரு மாதமும் நாம் பல்வேறு விதமான பரிவர்த்தனைகளை மேற்கொள்வோம். குறிப்பாக இந்த பரிவர்த்தனைகள் அனைத்து ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அதிலும் நாம் சரியாக பணம் செலுத்தாமல் விட்டுவிட்டால் அந்த சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே அதற்குவேண்டி ஆட்டோ டெபிட் மூலமாக தாமாக டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலமாக பணம் எடுப்பதற்கு நாம் அனுமதி கொடுத்திருப்போம். குறிப்பாக இந்த ஆட்டோ டெபிட் வசதியை இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

அதேசமயம் இந்த ஆட்டோ டெபிட் வசதியில் பல்வேறு மோசடி வேலைகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. அதாவது நமது கணக்கை பேங்கிங் செய்து அதிலிருந்து பணம் எடுப்பது, குறிப்பிட்ட தவணைக்கு நமது அனுமதி இல்லாமலேயே நிறுவனங்கள் பணத்தை எடுத்துக் கொள்வது போன்றவை நடக்கின்றன.

எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது இன்று முதல்அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் செப்டம்பர் 30-ம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் புதிய விதிகள் படி வங்கிககள் பயனர்களின் பணத்தை தானியங்கி முறையில் (Auto Debit) மாற்றம் செய்வதாக இருந்தால் 24 மணி நேரத்திற்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். குறிப்பாக அவர் அனுமதி கொடுத்த பிறகே பணப்பரிமாற்றம்
நடக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தானியங்கி முறையில் டெபிட் பணப் பரிமாற்றம் செய்வது, தவணை தொகை செலுத்துவது போன்றவற்றில் முறையான அனுமதி பெற்றே மாற்ற வேண்டும். பின்பு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது தொடர்பாக நிரந்தர அறிவிப்புகளை வழங்கவேண்டும்.

அதேபோல் 5000 ரூபாயக்கு மேல் தானியங்கி டெபிட் பணப்பரிமாற்றம் செய்வதாக இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு ஓ.டி.பி அனுப்பவேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பல மோசடிகளை தடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications