அம்பலம் : ரேன்சம்வேர் தாக்குதலுக்கும் வடகொரியவிற்க்கும் தொடர்பு.!?

By Prakash
|

சைபர்-பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் வட கொரியா தொழில்நுட்ப ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர்,கடந்த சில நாட்களாகவே ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் இத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. இந்நிலையில் . ஒரே நாளில் 150 நாடுகளில் உள்ள 300,000 கம்ப்யூட்டர்களை ரேன்சம்வேர் வைரஸ் முடக்கியுள்ளது.

ரேன்சம்வேர் தக்குதல் பெரும்பாலும் பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள், இ-மெயில், நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை குறி வைத்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் உலகஅளவில் பல மில்லியன் வருவாய் இழந்துள்ளது.

ரேன்சம்வேர்:

ரேன்சம்வேர்:

சைமென்டெக் மற்றும் காஸ்பர்ஸ்கி ஆய்வகம் திங்களன்று அறிவித்த அறிக்கையில் மென்பொருளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன. மேலும் மென்பொருள் தொழில்நுட்பம் மிகுந்தபாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது, பல நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் இது வடகொரியாவின் ஹேக்கிங் நடவடிக்கையாக இருக்கலாம் என அறிவித்துள்ளனர்.

தென் கொரியா:

தென் கொரியா:

தென்கொரியா, ஆஸ்திரேலியா விலும் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடந்துள்ளன. ஆஸ் திரேலியாவில் நடுத்தர நிறுவனங் களில் உள்ள கம்ப்யூட்டர்களில் ரேன்சம்வேர் தாக்கியுள்ளது. தென் கொரியாவில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்பது கம்ப்யூட்டர்களில் ரேன்சம்வேர் தாக்குதல் நடந்துள்ளாதாக தெரியவந்துள்ளது. ஆனால் எங்கெங்கு நடந்துள்ளன என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. பிரிட்டனில் பல்வேறு மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளன

கூகுள்:

கூகுள்:

கூகுள் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான நீல் மெஹ்தா அவரது ட்விட்டரில் சில சான்றுகளை வெளியிட்டுள்ளார், அவர் ட்விட்டர் பக்கத்தில் வடகொரியா ரேன்சம்வேர் தாக்குதல் திட்டமிட்டு நடத்தியுள்ளது, மேலும் கணினி ஹேக்கிங் அதிகமாய் செய்யப்பட்டுள்ளது என அறிவத்திருந்தார்.

 அமெரிக்கா;

அமெரிக்கா;

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தது என்னவென்றால் தாக்குதலுக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று கூறமுடியவில்லை, ஆனால் அவர்கள் வட கொரியா மீது சிறிது சந்தேகம் உள்ளது என அறவித்தனர்.

ஹாங்காங் :

ஹாங்காங் :

ஹாங்காங் பங்குச் சந்தை செய்தி தொடர்பாளர் கூறுகையில், தற்போது வரை அனைத்து கம்ப் யூட்டர்களும் எப்போதும் போல இயங்கி கொண்டிருக்கின்றன. இருந்தாலும் உயர் தொழில்நுட்ப ரீதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

 ரேன்சம்வேர் வைரஸ்:

ரேன்சம்வேர் வைரஸ்:

இது ஒரு கணினியிலிருந்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ள (நெட்வொர்க்) மற்ற கணினிகளுக்கு பரவி வருகிறது. இதுதவிர, மின்னஞ்சல் மூலமும் பரவுகிறது. இவ்வாறு பரவுவதைத் தடுக்க உரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த வைரஸிலிருந்து விடுபடுவதற்கு ரொக்கம் செலுத்துமாறு கோரினால் அதை ஏற்க வேண்டாம்.

இணையம்:

இணையம்:

இணையம் வழியாக ஊடுருவும் வைரஸ், கணினி டேப்லேட், ஸ்மாரட்போன்களில் உள்ள அனைத்து தகவல்களையும் முடக்கிவிடுகிறது,
பின்னர் குறிபிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே தகவல்கள் திரும்பக் கிடைக்கும் என்ற மிரட்டல் வாசகம் கணினி திரையில் தோன்றுகிறது, அதன் பிறகு கணினியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

 சைபர் செக்யூரிட்டி:

சைபர் செக்யூரிட்டி:

தற்போது, குறைந்த வேகத்தி லேயே செயல்பட்டுவரும் ரேன்சம் வேர் தாக்குதல், விரைவில் புதிய அச்சுறுத்துல்களுடன் விரைந்து தாக்கும் என சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன

அவாஸ்ட்:

அவாஸ்ட்:

ரஷ்யா, தைவான், உக்ரைன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிக சைபர் தாக்குதல் நடந்துள்ளன என அவாஸ்ட் நிறுவனம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Researchers See North Korea Link to Global Cyber-Attacks : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X