காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

|

எதோ ஒரு காரணத்தினால், நீங்கள் ஒரு வறண்ட பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொள்வதைக் கற்பனை செய்து பாருங்கள், இந்த சூழ்நிலையைச் சொன்னதும், உங்கள் மனதிற்குள் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை வறண்ட நிலம், சூடான காற்று, மணல், முக்கியமாக 'தாகம்', தண்ணீருக்கான தேடல் போன்ற விஷயங்கள் நிச்சயமாகத் தோன்றி மறைந்திருக்கும். வறண்ட நிலத்தில் நாம் சிக்கிக் கொண்டால் என்னவாகும் என்ற உடனே இவ்வளவு கற்பனைகள் நம் மனதில் வந்து மறைகிறதே. இந்த பகுதியில் வசிக்கும் மனிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கை எவ்வளவு சவாலானது என்று யோசித்துப் பாருங்கள்.

வறண்ட நிலங்களில் வாழும் மக்கள் தொகை

வறண்ட நிலங்களில் வாழும் மக்கள் தொகை

வறண்ட நிலங்கள் மற்றும் பாலைவன பகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தொகை வாழ்ந்து வருகிறது. இவர்களின் வாழ்க்கை எப்படி சவாலானது என்பது, அங்கிருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். இத்தகைய பகுதிகளில், மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. ஆனால், வெப்பநிலை அதிகமாக உள்ளது மற்றும் ஈரப்பதம் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் தாவரங்களின் பொதுவான பற்றாக்குறை உள்ளது. இந்த பாலைவனங்கள் உலகின் நிலப்பரப்பில் சுமார் 35 சதவிகிதத்தைக் கவர்ந்துள்ளது.

வறண்ட நிலங்களில் தண்ணீரைச் சேகரிப்பது எவ்வளவு சிக்கல் தெரியுமா?

வறண்ட நிலங்களில் தண்ணீரைச் சேகரிப்பது எவ்வளவு சிக்கல் தெரியுமா?

உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் வறண்ட நிலங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கு இருக்கும் பெரும் சிக்கல்களில் ஒன்று, அவர்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேகரிப்பதாகும். தண்ணீர் பற்றாக்குறை தான் இந்த வசிக்கும் மக்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இருப்பினும், ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மெல்லிய காற்றில் இருந்து தண்ணீரை எடுக்க முடியும் என்று நம்புகிறார்கள். கருதுகோளை நிரூபிக்க, குழு குறைந்த விலை பாலிமர் ஃபிலிம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

காற்றில் இருந்து நீரை வடிகட்ட எவ்வளவு செலவாகும்?

காற்றில் இருந்து நீரை வடிகட்ட எவ்வளவு செலவாகும்?

இது வறண்ட சூழலில் இருக்கும் வளிமண்டல நீரைப் பிரித்தெடுக்கக் கூடிய திறனுடன் இயங்குகிறது. புதுப்பிக்கத்தக்க பயோமாஸ் மற்றும் ஹைக்ரோஸ்கோபிக் உப்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த ஃபிலிம்களின் விலை ஒரு கிலோவிற்கு வெறும் $2 (சுமார் ரூ. 155) என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 15 சதவீதத்திற்கும் குறைவான ஈரப்பதம் உள்ள பகுதிகளில் இந்த ஃபிலிம் மூலம் ஒரு கிலோவிற்கு ஒரு நாளைக்கு சுமார் ஆறு லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை உற்பத்தி செய்ய முடியுமாம்.

13 லிட்டர் நீரை காற்றில் இருந்தே உற்பத்தி செய்ய முடியுமா?

13 லிட்டர் நீரை காற்றில் இருந்தே உற்பத்தி செய்ய முடியுமா?

அதேபோல், 30 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள பகுதிகளில் சுமார் 13 லிட்டர் வரை நீரைக் காற்றில் இருந்தே உற்பத்தி செய்ய முடியும் என்று இந்த ஃபிலிம்களை உருவாகியுள்ள ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. இந்த தொகை வறண்ட பிராந்தியத்தில் ஒரு நல்ல பற்றாக்குறை வளமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. தடிமனான ஃபிலிம்களை உருவாக்குவதன் மூலமும் செயல்முறையை மேம்படுத்துவதன் மூலமும் நீர் விளைச்சலை வியத்தகு முறையில் அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் முறை

காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் முறை

பாலைவனக் காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் மற்ற முயற்சிகள் பொதுவாக ஆற்றல் மிகுந்தவை. ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிட்டுள்ளனர். இந்தப் புதிய வேலை பூமியின் வெப்பமான, வறண்ட இடங்களில் தண்ணீரைப் பெற மக்கள் பயன்படுத்தக்கூடிய நடைமுறை தீர்வுகளைப் பற்றியது என்று மூத்த எழுத்தாளர் பேராசிரியர் குய்ஹுவா யூ கூறியுள்ளார். மேலும், இந்த சாதனம் செயல்பட எளிதானது மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் எளிதாக நிறுவக் கூடியது.

ஜெல் மூலம் உருவாக்கப்படும் ஃபிலிம்கள்

ஜெல் மூலம் உருவாக்கப்படும் ஃபிலிம்கள்

இது நீங்கள் பயன்படுத்த ஒரு மேம்பட்ட அறிவை கொண்டிருக்கத் தேவை இல்லை, என்று முன்னணி எழுத்தாளர் மற்றும் யுவின் ஆய்வகத்தில் முன்னாள் மாணவர் Youhong 'Nancy' Guo கூறியுள்ளார். இந்த ஃபிலிம் நெகிழ்வானது மற்றும் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் எப்படி வேண்டுமானாலும் வடிவமைக்கப்படலாம். இந்த ஃபிலிம்களை உருவாக்க ஒரு ஜெல் தேவைப்படுகிறது. அதில் அனைத்து தொடர்புடைய பொருட்களும் உள்ளன.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

குறைந்த செலவில் அதிக நீரை இனி சேமிக்க முடியும்

குறைந்த செலவில் அதிக நீரை இனி சேமிக்க முடியும்

இந்த ஜெல் அச்சில் அமைக்க இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று கூறியுள்ளனர். பயனர்கள் அதை உறைய வைத்து உலர்த்த வேண்டும். இறுதியாக, அச்சிலிருந்து ஃபிலிமை அகற்றி, நேரடியாகப் பயன்படுத்தத் துவங்கலாம் என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. உண்மையில், இந்த கண்டுபிடிப்பு வறண்ட நிலங்களில் வாழும் மக்கள் தொகைக்கு பெரும் மதிப்பை வழங்கக்கூடியது. வறண்ட நிலங்களில் வாழத் தேவையான நீரைக் குறைந்த விலையில் சேகரிக்க இது உதவுகிறது.

Best Mobiles in India

English summary
Researchers Create Polymer Film That Can Yield Up to 13 Litres of Water From Air : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X