Home
News

யாரு சாமி இவன்- பட்டையை கிளப்பும் 7 வயது சிறுவன்: ஒரே வீடியோ 148K பார்வையாளர்கள்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப் தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் நமக்கு தேவையான பல முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி தினசரி செய்திகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தையும் இந்த தளத்தில் பார்க்க முடியும். அதேபோல் யூடியூப் தளத்தில் தனிநபர் கூட ஒரு சேனலை துவங்கி தகவல் நிறைந்த சிறப்பான வீடியோக்களை வெளியிட்டால் வருமானம் கிடைக்கும்.

பல்வேறு நோக்கத்தோடு வீடியோ பதிவு

பல்வேறு நோக்கத்தோடு வீடியோ பதிவு

பலரும் வருமான நோக்கத்தோடு யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ பதிவேற்று வருகின்றனர். ஒரு சிலர் பிரபலமடைய வேண்டும் என வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் சிலர் எதிர்பாராத வீடியோக்களையும், தங்களது அன்றாட நடைமுறைகளையும் பதிவிடுவார்கள் அந்த வீடியோ வைரலாகி பிரபலமடைவது உண்டு.

ரித்து ராக்ஸ் யூடியூப் சேனல்

ரித்து ராக்ஸ் யூடியூப் சேனல்

அதன்படி தற்போது ரித்து ராக்ஸ் (Rithu Rocks) என்ற சேனலில் பதிவிட்ட ஒரு வீடியோ இரண்டே நாட்களில் 145K பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இதில் பதிவிடப்பட்டுள்ள பிரேக்கிங் நியூஸ் ரிப்போர்டர்ஸ் கலாட்டா என்ற வீடியோ மிகவும் பிரபலமடைந்து வைரலாகி வருகிறது.

இயல்பாக பட்டையை கிளப்பும் சிறுவன்

இயல்பாக பட்டையை கிளப்பும் சிறுவன்

இதில் நடித்து ரித்து என்ற சிறுவர் மிகவும் இயல்பாக பட்டையை கிளப்பியுள்ளார் என்றுதான் கூற வேண்டும். இதில் நடித்துள்ள சிறுவனின் வயது 7 ஆகும். குறிப்பாக வீடியோ முடிவில் வரும் ப்ளூப்பர்ஸ் பலரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. ரித்து என்ற ஒரே சிறுவன் பெண் தொகுப்பாளராகவும், ஆண் செய்தியாளராகவும், விவசாய முதியவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வார்த்தைக்கு ஏற்ப முகபாவனை

இதற்கு முன்பு இதேபோல் ஜம்ப் கட்ஸ் என்ற யூடியூப் சேனல் வீடியோ மிகவும் பிரபலமடைந்தது. அதில் ஒரே நபர் அனைத்து கதாபாத்திரத்திலும் தோன்றி அசத்தியிருப்பார். தற்போது இந்த 7 வயது சிறுவன் உச்சரிக்கும் தமிழ் சொல் உட்பட அதற்கேற்ப முகபாவனை அனைத்தும் பலரையும் கவர்ந்து வருகிறது.

8 வீடியோவுக்கு 57கே சப்ஸ்கிரைபர்கள்

8 வீடியோவுக்கு 57கே சப்ஸ்கிரைபர்கள்

ரித்து ராக்ஸ் சேனலில் மொத்தமாக 8 வீடியோ மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு வீடியோ பிரபலமடைந்து வைரலான காரணத்தால் தற்போது இந்த சேனலுக்கு 52.5K சப்ஸ்கிரைபர்கள் கிடைத்துள்ளனர். இந்த வீடியோ பின்னணியில் பெரிய டீம் ஒர்க் எல்லாம் ஒன்றுமில்லை., நான், ரித்து, ரித்துவின் தாயார் என மூன்று பேர் மட்டுமே பின்னணியில் இருக்கிறோம் என ரித்துவின் தந்தையார் குறிப்பிட்டுள்ளார்.

படிப்படியாக பாராட்டுகள்

முதல் வீடியோவின் மூலம் ரித்துவின் நடிப்பு திறனை கண்ட அவரது தந்தையார் தொடர்ந்து அடுத்தடுத்து வீடியோக்களை பதிவு செய்ய தொடங்கியுள்ளார். இதற்கு படிப்படியாக வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு வீடியோ ஆரம்பித்து முடிப்பதற்கு 10 மணிநேரத்துக்கும் மேல் ஆகலாம் என கூறப்பட்டுள்ளது.

சிறந்த நடிப்பு திறமை மற்றும் பாவனை

குறிப்பாக இந்த வீடியோ பார்க்கும் போது பெண் கதாபாத்திரம், ஆண் செய்தியாளர் என அனைத்தும் வெவ்வேறு நபர் போல் இருக்கும். அந்த அளவிற்கு ரித்து தத்ரூபமாக நடித்து கலக்கியிருப்பார். குரல் ஒற்றுமையும் கண்டுபிடிப்பது சிரமமே ஆகும். இந்த சேனலில் பிரேக்கிங் நியூஸ் ரிப்போர்டர்ஸ் கலாட்டா, டாக்டர் இன்சைட் பேசண்ட் கலாட்டா, மேடம் பெர்பக்ட் இன்டர்வியூ கலாட்டா, ரோபோட் கலாட்டா எந்திரன் 3.0, காஞ்சனா ரிட்டர்ன்ஸ் ஃபன்னி கோஸ்ட், சிட்டி கய் மற்றும் வில்லேஜ் கய், பாக்கெட் மணி பிராப்ளம்ஸ் என எட்டு வீடியோ இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reporters Galatta: Rithu Rocks Youtube channel Video Went Viral in Social Media!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X