இன்ஸ்டாகிராம் சேவையில் தொடரும் சிக்கல்: புகார்கள் குவிந்து வருவதாக தகவல்!

|

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் அறிமுகமான வண்ணம் இருக்கும். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டு வருவதாக அதன் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பிரதான பயன்பாடாக இன்ஸ்டாகிராம்

பிரதான பயன்பாடாக இன்ஸ்டாகிராம்

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக இருப்பது பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவையாகும். இதில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாக இருந்து வருகிறது.

டிக்டாக் செயலிக்கு தடை

டிக்டாக் செயலிக்கு தடை

டிக்டாக் செயலி இந்தியாவில் மிக பிரதான பொழுதுபோக்கு செயலியாக இருந்தது. டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்களும், திரைத்துறைக்கு வந்தவர்களும் உண்டு. பாதுகாப்பு அம்ச குறைபாட்டிற்காக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டது.

இன்ஸ்டா ரீல்ஸ் வசதி

இன்ஸ்டா ரீல்ஸ் வசதி

டிக்டாக் செயலியாக மாற்றாக இன்ஸ்டாகிராம் தனது பயன்பாட்டில் இன்ஸ்டா ரீல்ஸ் அம்சத்தை கொண்டு வந்தது. இந்த ரீல்ஸ் வசதி ஆனது டிக்டாக் போலவே பின்னணி இசையில் 15 நொடிகள் வீடியோவாக நடித்து பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

செயலியை பயன்படுத்துவதில் சிக்கல்

செயலியை பயன்படுத்துவதில் சிக்கல்

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக அதன் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர், ஆண்ட்ராய்டு சாதனம் பயன்படுத்தும் பல பயனர்கள் தங்கள் ஸ்மாரட்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக புகார் அளித்துள்ளனர்.

2 வருசமா 9 வயது சிறுவனை அடிச்சுக்க ஆளே இல்ல: 2020 இல் அதிக வருமானம் ஈட்டிய யூடியூப் சேனல்!

800 புகார்கள் வந்துள்ளதாக தகவல்

800 புகார்கள் வந்துள்ளதாக தகவல்

டவுன்டெடக்டர்.காம் இதுகுறித்து 800 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமின்றி ஐஓஎஸ் பயனர்களும் இந்த சிக்கலை எதிர்கொண்டு வருவதாக தெரிவத்துள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு வழிமுறைகள் தீர்வுகள் காண முயற்சி

பல்வேறு வழிமுறைகள் தீர்வுகள் காண முயற்சி

இன்ஸ்டாகிராகம் சிக்கல் தங்களது சாதனத்தை சிக்கலில் உட்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். சிலர் தங்களது சாதனத்தை ரீபூட், ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் உபயோக்கின்றனர் எனவும் சாதனத்தில் இருந்து செயலியை நீக்கிவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்வது பயன்படுத்தவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இன்ஸ்டா தரப்பில் பதில்கள் இல்லை

இன்ஸ்டா தரப்பில் பதில்கள் இல்லை

இருப்பினும் தற்போதுவரை இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கவில்லை என பலர் கூறுகின்றனர். இந்த புகார் குறித்து இன்ஸ்டாகிராம் தற்போதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reported that Instagram Users Continue to Face Issues with Usage

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X