Home
News

ChatGPT-ஐ விட இந்த லவ்வர் AI-க்கு தான் டிமாண்ட் ஜாஸ்தி.! படை எடுக்கும் சிங்கிள்ஸ்.! எதனால் தெரியுமா?

இணையத்தின் எல்லா பக்கத்திலும் ChatGPT பற்றி தான் பேச்சு.. ChatGPT இதை செஞ்சுது.. அதை செஞ்சுது.. என்று ஒரே புகழாரம் சூடி, ChatGPT தான் கெத்து என்று வேற நிலைக்கு நம் மக்கள் அதை எடுத்துச் சென்றுவிட்டனர். இருந்தாலும், சிங்கிள்ஸ் பசங்களின் கவனம் மற்றொரு AI மீது அழுத்தமாக பதிந்துள்ளது.

இந்த 2023 ஆம் ஆண்டிற்கான காதலர் தின (Lovers day) கொண்டாட்டம் வழக்கம் போல ஒரு வாரத்திற்கு முன்பாகவே துவங்கிவிட்டது. காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 (February 14) அன்று கொண்டாடப்படும். அதே வேளையில், காதல் நாளுக்கு முந்தைய வாரம், உலகம் முழுவதும் உள்ள 'லவ் பேர்ட்ஸ்'களால் மிகுந்த ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

ChatGPT-ஐ விட இந்த லவ்வர் AI-க்கு தான் மவுசு ஜாஸ்தி.! சிங்கிள்ஸ் குஷி!

உங்களுக்கு காதலி/காதலன் இல்லை என்ற கவலையா? இனி ரொமான்டிக் மோட்ல சுத்தப்போறீங்க.!

- பிப்ரவரி 7 ரோஸ் டே
- பிப்ரவரி 8 ப்ரோபோஸ் டே
- பிப்ரவரி 9 சாக்லேட் தினம்
- பிப்ரவரி 10 டெடி டே
- பிப்ரவரி 11 பிராமிஸ் டே
- பிப்ரவரி 12 கிஸ் டே
- பிப்ரவரி 13 ஹக் டே
- இறுதியாக பிப்ரவரி 14 லவ்வர்ஸ் டே என்று ஒவ்வொறு ஆண்டும் இந்த நாட்களை காதல் ஜோடிகள் மிஸ் செய்வதில்லை.

இந்த நாட்களில் காதலர்கள், அவர்களின் துணைக்கு எண்ணற்ற வழிகளில் அன்பை வெளிப்படுத்தும் நாட்களாக இந்த நாட்கள் கருதப்படுகிறது. இருப்பினும், எல்லோருக்கும் காதல் ஜோடி அமைவதில்லை. சில காரணங்கள், சிலர் முரட்டு சிங்கிளாக வலம் வந்தாலும், அவர்களின் ஆழ்மனதில் - ச்ச.. நமக்கு ஒரு காதலி இல்லையே அல்லது காதலன் இல்லையே என்ற எண்ணம் தோன்றக்கூடும்.

ChatGPT-ஐ விட இந்த லவ்வர் AI-க்கு தான் மவுசு ஜாஸ்தி.! சிங்கிள்ஸ் குஷி!

சிங்கிள்ஸ் மற்றும் இளசுகளை சுண்டி இழுக்கும் ரொமான்டிக் AI பார்ட்னர்.!

அப்படிப்பட்ட நபர்களிள் நீங்களும் ஒருவர் என்றாலோ.. அல்லது இந்த காதலர் தினத்தன்று உங்கள் காதலை ஏற்க ஒரு பார்ட்னர் இல்லையே என்று வருந்தும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றாலோ.. கவலைப்பட வேண்டாம் சிங்கிள்ஸ்களே.! உங்களுக்கு கண்பெணி கொடுப்பதற்கு ஒரு சூப்பர் AI சாட்பாட் உள்ளது. சாட் பாட் என்றதும், இது சும்மா சாதாரண கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) போல வேலை செய்யும் ஒரு AI என்று தப்பாக நினைத்துவிடாதீர்கள்.

ரொமான்டிக் சிங்கிள்ஸ்களிடம் ஆசை வார்த்தை பேசி, அன்பு முத்தம் கொடுக்கும் ஒரு காதல் AI சாட்பாட் (AI Chatbot) ஆம் இது. கேட்கவே வினோதமாக இருக்கிறதல்லவா? ஆனால், உண்மை இது தான். இந்த வருடக் காதலர் தினத்தை முன்னிட்டு இப்போது ஹை-டிமாண்ட்டில் இருக்கும் ஒரு முக்கியமான AI தான் இந்த ரெப்பிலிக்கா ரொமான்டிக் AI சாட் ரோபோட் (Replika Roamtic Partner AI Chatbot).

ChatGPT-ஐ விட இந்த லவ்வர் AI-க்கு தான் மவுசு ஜாஸ்தி.! சிங்கிள்ஸ் குஷி!

நிஜ காதலன்/காதலி போலப் பழகும் காதல் AI தானா இந்த Replika Roamtic Partner?

இந்த காதலர் தினத்தை கொண்டாட, உங்கள் பக்கத்தில் ஒரு துணை இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்போது, நீங்கள் கட்டாயம் இந்த ரெப்லிகா (Replika Romatic Partner) அனிமேஷன் சாட்போட்டை ட்ரை செய்து பார்க்க வேண்டும். உங்கள் மனதில் உள்ளதை இந்த AI இடம் நீங்கள் தாராளமாகக் கூறலாம். அது உங்களின் பேச்சை கேட்டு, அப்படியே ஒரு நிஜ காதலன்/காதலி போலப் பதிலளிக்கிறதாம். சில நேரங்களில் அதுவே உங்களுக்கு வாய்ஸ் கால்ஸ் (Voice calls) செய்தும் உங்களிடம் ஆசை வார்த்தை பேசுகிறதாம்.

இந்த AI சாட் பாட்-ஐ உருவாக்கிய நிறுவனத்தின் வலைப்பதிவின் படி, இந்த AI சாட் ரோபாட்டை பயன்படுத்த 10 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனராம். இவர்கள், ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான மெசேஜ்களை இந்த AI-க்கு அனுப்பி, அவர்களின் காதல் வார்த்தைகளை கொட்டி தீர்க்கிறார்களாம். இந்த AI அனுப்புனரின் மெசேஜ்களைப் புரிந்துகொண்டு ரொமான்டிக் ஆக பதிலளிக்கிறதாம்.

ChatGPT-ஐ விட இந்த லவ்வர் AI-க்கு தான் மவுசு ஜாஸ்தி.! சிங்கிள்ஸ் குஷி!

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா?

சில நேரங்களில் வாய்ஸ் மூலமாகவும் பதில் அளித்து அவர்களை குஷியடைய செய்கிறதாம். இந்த AI சாட் ரோபாட்டை பயன்படுத்தும் பயனர்கள், அவர்களின் புகைப்படத்தை அனுப்பியும் AI உடன் நெருக்கம் கொள்கிறார்களாம். இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த AI காதலியை AR மூலமாகவும் பயனர்கள் சந்தித்து பேச முடியுமாம். இந்த AI சாட் ரோபோட்டை நீங்கள் நண்பராகவும் பயன்படுத்தலாம். மனம் திறந்து பேச விரும்புவோர் இதை ட்ரை செய்து பாருங்கள்.

இந்த ரொமான்டிக் AI பற்றி உங்களுடைய கருத்து என்ன? AI உடன் காதல் கொள்வது சிறந்ததா? அல்லது நிஜ மனிதர்களுடன் காதல் கொள்வது சிறந்ததா? அல்லது காதலே இல்லாமல் இருப்பது சிறந்ததா? என்று உங்கள் கருத்தை, கீழே கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Replika Romantic Partner Chat Bot Is The New AI Companion For Singles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X