ஒரே அறிவுரை: உடனடியாக நோக்கியா 5310-க்கு மாறுங்கள்: ஐபிஎஸ் அதிகாரி டுவீட்!

|

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஒன் அட்வைஸ் கேட்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு ஐபிஎஸ் அதிகாரி நோக்கியா 5310-க்கு மாறுங்கள் என பதிலளித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் இல்லாதோரை விரல்விட்டு எண்ணி விடலாம்

ஸ்மார்ட்போன் இல்லாதோரை விரல்விட்டு எண்ணி விடலாம்

ஸ்மார்ட்போன்கள் தேவை என்பது இந்த காலக்கட்டத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன் இல்லாதோரை விரல்விட்டு எண்ணி விடலாம். தினசரி நேரத்தில் தூக்கம், வேலையை தவிர்த்து பெரும்பாலானோர் தங்களது நேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிட்டு வருகின்றனர்.

இரவு முழுவதும் சேட்டிங், வீடியோ ஸ்ட்ரீமிங்

இரவு முழுவதும் சேட்டிங், வீடியோ ஸ்ட்ரீமிங்

சிலர் தூக்கம், உணவு ஏதுமின்றி இரவு முழுவதும் சேட்டிங், வீடியோ ஸ்ட்ரீமிங் என தங்களது நேரத்தை ஸ்மார்ட்போனில் செலவிட்டு வருகின்றனர். டிஜிட்டல் உலகில் பண பரிவர்த்தனையில் தொடங்கி பல விஷயங்களுக்கு ஸ்மார்ட்போன்கள் பிரதானமாக இருந்து வருகிறது.

ஆன்லைன் பண மோசடி

ஆன்லைன் பண மோசடி

ஸ்மார்ட்போன்கள் ஹேக் செய்யப்பட்டு திருடப்படும் தகவல்கள், ஆன்லைன் பண மோசடி, பாலியல் குற்றங்கள் மார்பிங் புகைப்பட குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. மறுபுறம் ஆன்லைன் வகுப்புகள், இணையவழி கல்வி என பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு ஸ்மார்ட்போன்கள் முக்கியமாக இருந்து வருகிறது.

ஐபிஎஸ் அதிகாரி அருண்போத்ரா

ஐபிஎஸ் அதிகாரி அருண்போத்ரா

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அருண்போத்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் எல்லாரும் நோக்கியா போன்களுக்கு மாறினால் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் என குறிப்பிட்டிருந்தார். அவருடைய இந்த பதிவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்: ஏடிஎம் உங்க வீட்டுக்கே வரும்- எப்படி தெரியுமா?ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்: ஏடிஎம் உங்க வீட்டுக்கே வரும்- எப்படி தெரியுமா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ்

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ்

ஒடிசா கேடர் அதிகாரியாக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ராவிடம் டுவிட்டரில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற "ஒன் ஷாட் ஆலோசனை" வழங்கும்படி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா, தங்களின் மொபைலை நோக்கியா 5310 ஆக மாற்றிவிடுங்கள் என கூறியருந்தார்.

நோக்கியா 5310 உடன் மாற்றவும்

நோக்கியா 5310 உடன் மாற்றவும்

டுவிட்டுக்கு பதிலளித்த போத்ரா வெறுமனே "உங்கள் மொபைலை நோக்கியா 5310 உடன் மாற்றவும்" என குறிப்பிட்டிருந்தார். ஸ்மார்ட்போன்கள் மாணவர்களின் கவனச்சிதறதலுக்கு வழிவகுக்கும்.

பாராட்டுகளும், வாழ்த்துகளும்

பாராட்டுகளும், வாழ்த்துகளும்

அருண் போத்ரா பதிவுக்கு பலரும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்து வந்தாலும் எதிர்மறை கருத்துகளும் பதிவாகியுள்ளன. கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக சாதாரன மொபைலை பயன்படுத்தினால் நேரம் வீணாகாது எனவும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற அறிவிப்புகள் இல்லாததால் அவர்கள் படிப்பில் சிறப்பாக கவனம் செலுத்த வாய்ப்புள்ளது எனவும் அவரது டுவிட்டருக்கு ஆதரவாக கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Replace Smartphone With Nokia 5310: IPS Officers One Shot Advice to UPSC candidate

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X