வாடகை வீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி- ஆதார் அட்டை திருத்தத்தில் இனி அந்த தொல்லை இல்லை!

|

வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி வீட்டை மாற்றும் நிலை ஏற்படும். அப்படி வீடு மாறுபவர்களுக்கு முக்கிய சிக்கலாக இருப்பது அவர்களது ஆவணங்களில் முகவரி மாற்றுவது. ஒவ்வொரு இடத்துக்கும் சென்று கையெழுத்து வாங்கி அதை சப்மிட் செய்து ஆவணம் கைவந்து சேரும் போது, வேறு வீடு பார்க்கும் நிலையே ஏற்பட்டிருக்கும்.

பல்வேறு தேவைக்கு பயன்படும் ஆதார் கார்ட்

பல்வேறு தேவைக்கு பயன்படும் ஆதார் கார்ட்

ஆன்லைன் கார்ட் என்பது பல்வேறு தேவைக்கும் பிரதானமாக இருக்கிறது. ஆன்லைன் அட்டையில் வழங்கப்பட்டுள்ள பல தகவல்களை ஆன்லைனில் மாற்றலாம். இருப்பினும் குறிப்பிட்ட தகவல்களை மாற்றுவதற்கு இ-சேவை மையம் செல்ல வேண்டிய தேவை இருந்தது. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் சந்திக்கும் சிக்கலை கருத்தில் கொண்டு யுஐடிஏஐ பிரத்யேக வசதியை வழங்கியுள்ளது.

முகவரியை புதுப்பித்தல் செய்யும் வசதி

முகவரியை புதுப்பித்தல் செய்யும் வசதி

கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போதைய வசதி மூலம் முகவரியை புதுப்பித்தல் செய்ய முடியும். நிரந்தரமாக முகவரியை மாற்ற வேண்டும் என திட்டமிட்டு இருந்தால் நபர்கள் நேரடியாக இ-சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். இந்த சேவை எப்படி வீட்டில் இருந்தபடியே பெறுவது என்பதற்கான வழிமுறைகள் பார்க்கலாம்.

ஆதார் அட்டையில் Address Change

ஆதார் அட்டையில் Address Change

மக்கள் ஆதார் அட்டையில் Address Change நிரந்தரமாக முகவரி மாற்ற வேண்டும் என்றால் அனைத்து பிற ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு இ-சேவை மையம் செல்ல வேண்டி இருந்தது. தற்போது ஆதார் அட்டையில் உள்ள முகவரியை புதுப்பிக்க., முதற்கட்டமாக https://uidai.gov.in/ என்ற இணையதளத்தை திறக்கவும். இதில் Address Request என்ற தேர்வை கிளிக் செய்யும் முந்தையது போல் இல்லாமல் புது பக்கம் திறக்கும்.

மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்

மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்

இந்த பக்கத்துக்குள் சென்றவுடன் Update Address என்ற தேர்வு காண்பிக்கப்படும். இது கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும். இதில் தங்களது ஆதார் அட்டை எண் உள்ளிட்ட லாக்-இன் விவரங்கள் கேட்கும். அனைத்தையும் பூர்த்தி செய்து உள்ளே நுழைந்த பிறகு. தங்களுக்கான புதிய முகவரியை அப்டேட் செய்து கொள்ளலாம். (யுஐடிஏஐ) ஆதார் அட்டை விநியோ தனிநபர் தகவல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரையும் மகிழ்விக்கும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பிரதான தேவையாக இருக்கும் ஆதார் கார்ட்

பிரதான தேவையாக இருக்கும் ஆதார் கார்ட்

ஆதார் கார்டு என்பது பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக்கப்பட்டு வருகிறது. வங்கி சேவைகளில் தொடங்கி பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமாக இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா நடவடிக்கையில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அத்தியாவசியமான ஆவணங்கள்

அத்தியாவசியமான ஆவணங்கள்

வங்கிகள் கணக்குகளில் தொடங்கி சிம் கார்டு வாங்குவதன் மூலம் பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் கார்டு பிரதானமாக இருந்து வருகிறது. சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட ஆதார் பான் கார்டு இணைக்க உத்தரவிடப்பட்டது. ஆதார் கார்டு அத்தியாவசியமான ஆவணங்களாக மாற்றப்பட்டு வருகிறது. வங்கி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என அனைத்துக்கும் ஆதார் கார்டு முக்கியமாக இருக்கிறது. ஆதார் கார்டில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி

பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி

ஆதார் கார்டில் ஆன்லைனில் உங்கள் பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட பிற விவரங்களை புதுப்பிக்கலாம். அதேபோல் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க விரும்பினால் அதற்கான துணை ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தை நேரில் சென்று தொடர்பு கொள்ள வேண்டும். ஒருவர் உங்கள் ஆதார் அட்டையில் இரண்டு முறை மட்டுமே பெயரை புதுப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எழுத்துப்பிழை திருத்தங்கள், திருமணத்திற்கு பிறகு பெயர் மாற்றம் உள்ளிட்ட மாற்றங்களுக்கு இது உட்பட்டது. அதேபோல் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை புதுப்பிக்க வரம்பு இல்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Rented house people can change address in Aadhaar through Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X