முகேஷ் அம்பானியின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? ஆடிப் போய்டுவிங்க ஆடி.!

திருபாய் அம்பானியோ, நோ, நோ. நான் ஒருநாள் ஆயில் நிறுவனத்தின் அதிபர் ஆவேன். இவருக்குப் போலியாக மரியாதையோ சல்யூட்டோ அடிக்க மாட்டேன்' என்றார்.

|

பாரக்லேஸ் ஹுருன் இந்தியா ரிச் என்ற ஒரு அமைப்பு இப்போது புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதன்படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு நாளைக்கு 300 கோடி ரூபாய் வருமானம் பெறுவதான அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. கடந்த ஒரு வருடமாக அவருக்கு வருமானம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் 3,71,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அம்பானி தொடர்ந்து பணக்காரர் பட்டியலில் முன்னேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அம்பானி அவர்கள் தொடர்ந்து மலிவு விலையில் பல்வேறு புதிய சாதனங்கள் மற்றும் புதிய திட்டங்களையும் அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருபாய் அம்பானி

திருபாய் அம்பானி

திருபாய் அம்பானி. அவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளிப் படிப்பை நிறுத்திக்கொண்டவர். அவர் ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும்போது அங்கே ஒருவருடைய கார் வந்தது. அனைவரும் அவரது காருக்கு பெட்ரோல் போட அங்கு உள்ள ஊழியர்கள் அனைவரும் போட்டிபோட்டுக்கொண்டு சூழ்ந்தனர்.

திருபாய் அம்பானி `ஏன் இப்படி?' எனக் கேட்கிறார்.

`அவர் பெரிய பணக்காரர், பெட்ரோல் ஆலையின் அதிபர். அவருடைய காருக்கு பெட்ரோல் போட்டால், நிறைய டிப்ஸ் தருவார். நீயும் போ!' என்று சொல்கிறார்கள்.

திருபாய் அம்பானியோ, `நோ, நோ. நான் ஒருநாள் ஆயில் நிறுவனத்தின் அதிபர் ஆவேன். இவருக்குப் போலியாக மரியாதையோ சல்யூட்டோ அடிக்க மாட்டேன்' என்றார். அனைவரும் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள். அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. பகல் முழுவதும் பெட்ரோல் நிரப்பும் வேலையைப் பார்த்துவிட்டு, இரவில் ஆடிட்டர் அலுவலகத்தில் கணக்குப் பார்க்கும் வேலைசெய்தார். அவருக்குச் சம்பளம் கொடுத்தபோது வாங்க மறுத்தார். `ஏன், அதிகம் வேண்டுமா?' எனக் கேட்டபோது, `இல்லையில்லை, நான் அக்கவுன்ட் கற்றுக்கொள்ளத்தான் இங்கு வந்தேன். சம்பளம் வேண்டாம்' என்றார். அவர் கனவுகண்டதுபோலவே பெரிய எண்ணெய் நிறுவன அதிபர் ஆனார்.திருபாய் அம்பானிக்கு முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும் நினாஇ தீப்தி என்ற மகள்களும் உள்ளனர். குறிப்பாக முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி தற்சமயம் இந்தியாவின் பெரிய அடையாளமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில், மிக சக்திவாய்ந்த வணிகர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மீதான நமது "பாசம்" ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் உச்சகட்டத்தை எட்டியது என்பது வெளிப்படை. அன்றிலிருந்து இன்று வரையிலாக அம்பானி பற்றிய தசெய்திகளை, கவல்களை மற்றும் விவரங்களை தேடித்தேடி படிக்கின்றோம் அல்லவா.? அப்படியான பிரபலத்துவம் பெற்றுள்ள முகேஷ் அம்பானியை பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான உண்மைகளை இங்கு புட்டுப்புட்டு வைக்கப்போகிறோம்.

வியாபாரத்திற்கு கிரிக்கெட்; மனதிற்கு.?

வியாபாரத்திற்கு கிரிக்கெட்; மனதிற்கு.?

ஐபில் கிரிக்கெட்டில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஆவார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அம்பானியின் பள்ளி நாட்களில் அவருக்கு பிடித்த விளையாட்டு எதுவென்று தெரியுமா.? - அது நமது இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி தானாம். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹாக்கி மீதான அதீத ஆர்வத்தினால் தான் அம்பானி தனது படிப்பை கோட்டை விட்டாராம்.!

அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் யாரென்று கூறினால் நம்புவீர்களா.?

அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் யாரென்று கூறினால் நம்புவீர்களா.?

"வியாபாரம் என்பது ஒரு யுத்தம், அதில் வியாபாரிகள் தான் போராளிகள்" என்பது தான் தற்கால சந்தைகளின் நிலைப்பாடு. ஆனால் அதெல்லாம் வளர்ந்த பின்னர் தான், பள்ளி பருவத்தில் இல்லை என்பதற்கு அம்பானியின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். தற்கால வணிகத் தொழிலதிபர்கள் ஆன ஆதி கோத்ரேஜ் மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர்கள் முகேஷ் அம்பானியின் பள்ளி தோழர்கள் ஆவார்கள், அவர்கள் அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸூம் கூடவாம்.!

அம்பானி செய்து பார்க்காத ஒரு காரியம்.!

அம்பானி செய்து பார்க்காத ஒரு காரியம்.!

முகேஷ் அம்பானி ஒரு டீடோட்டலர் ஆவார். அம்பானி அவரின் வாழ்நாளில் ஒரு முறை கூட மதுவை சுவைத்தது இல்லையாம். மேலும் அவர் ஒரு சுத்தமான சைவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாட் ஏ மேன்.

சத்தமின்றி சாதிக்கும் திறன்.!

சத்தமின்றி சாதிக்கும் திறன்.!

முகேஷ் அம்பானியின் கை படாத ஒரு வியாபாரமே இல்லை. இந்தியாவில் இருந்துகொண்டே உலக பெருநிறுவனங்களிடம் போட்டியிடும் அம்பானியின் திறமைகி அவரின் ஒரு சுத்திகரிப்பு நிறுவனம் சான்றாகும். குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள அந்த சுத்திகரிப்பு ஆலையானது, நாள் ஒன்றிற்கு 668000 பீப்பாய்கள் என்கிற கொள்ளவவை கொண்டுள்ளது. அதாவது இது உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும் என்று அர்த்தம்.

வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கொண்டே நாம் பார்த்த வேலை.!

வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கொண்டே நாம் பார்த்த வேலை.!

அம்பானி தலைமையின் கீழ் அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ, இந்திய டெலிகாம் துறையில் மாபெரும் கட்டண புரட்சியை ஏற்படுத்தியது என்பதற்கு நீங்களும் நாங்களும் தான் சாட்சி. அறிமுகம் ஆன அடுத்த 30 நாட்களால் சத்தமில்லமால் ஒரு விஷயம் நடந்தது அது என்னவென்று தெரியுமா.? இது ஏமாற்று வேலை.? அம்பானியை நம்ப வேண்டாம் என்று சந்தேகப்பட்டுக் கொண்டே பெரும்பாலான இந்தியர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் சேவைக்குள் நுழைந்தனர். அதாவது அறிமுகமான ஒரே மாதத்திற்குள் 16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை ஜியோ அடைந்தது.

இது அம்பானிக்கு மட்டுமே கிடைக்கும்

இது அம்பானிக்கு மட்டுமே கிடைக்கும்

இந்தியாவிற்கு முகேஷ் அம்பானி எவ்வளவு முக்கியமே என்பதை நீங்கள் அறிவீர்களா.? இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களில் Z- வகை பாதுகாப்புடன் உலா வரும் ஒரே தொழில் அதிபர் முகேஷ் அம்பானிதான்.

Best Mobiles in India

English summary
Reliances Mukesh Ambani earned Rs 300 crore per day over last one year : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X