ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்அடிப்படையில் இப்போது ஜியோ மியூசிக் மற்றும் சாவன் செயலி ஒன்றிணைய இருப்பதாகவும், இரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தியாகி உள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
ஜியோ மற்றும் சாவன் புதிய கூட்டணி மூலம் ஒரிஜினல் தரவுகளில் அதிக கவனம் செலுத்துவது மற்றும் தனித்துவ கலைஞர்களுக்கான சந்தையை உருவாக்குவது முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விளம்பர ரீதியாக மிகப்பெரிய மொபைல் தளமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ஜியோ 4ஜி பீச்சர்போனில் விரைவில் வாட்ஸ் ஆப் அம்சத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ பீச்சர் போன் பொதுவாக 2.4-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, அதன்பின் (240-320)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த பீச்சர் போன்.அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் ஜியோ 4ஜி பீச்சர்போன் ஆனது ரூ.1500-விலையில் கிடைக்கும், குறிப்பாக மூன்று ஆண்டுகளில் இந்த பணம் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜியோ மற்றும் சாவன் புதிய கூட்டணி மேலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மக்கள் இந்த சாவன் செயலியை அதிமாகப் பயன்படுத்துகின்றனர், மேலும் இப்போது அறிவித்துள்ள இந்த
புதிய கூட்டணி நிறுவண வளர்ச்சியில், ரிலையன்ஸ் நிறுவனம் பத்து கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.


சாவன் இணை நிறுவனர்களான ரிஷி மல்ஹோத்ரா, பரம்தீப் சிங் மற்றும் வினோத் பட் ஆகியோர் எப்போதும் போல தலைமை பதவிகளில் வகித்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.