நாங்க வாரோம்., தனியா- ரிலையன்ஸ் எடுத்து வைக்கும் புது முயற்சி: குதூகலத்தில் மக்கள்., இனி ஜாலிதான்!

|

தான் நுழைந்த துறையில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி வாகை சூடுவதில் வல்லமை படைத்த நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ். அதன்படி தற்போது போட்டிகள் நிறைந்திருக்கும் ஆன்லைன் வியாபாரத்துக்குள் அடியெடுத்து வைக்கிறது. மல்டி பிராண்ட் அழகு மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் அடியெடுத்து வைக்கிறது. Nykaa, Myntra மற்றும் டாடா போன்ற நிறுவனங்கள் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை சந்தையில் கடுமையான போட்டி நிலவி வருகின்றன. இந்த சந்தையில் சைலண்டாக ரிலையன்ஸ் அடியெடுத்து வைக்கிறது.

நான்கு சர்வதேச லேபிள்கள்

நான்கு சர்வதேச லேபிள்கள்

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் இந்தியாவில் ஆர்மணி, பர்பெர்ரி, டீசல், கேஸ் மற்றும் ஹ்யூகோ பாஸ் உள்ளிட்ட நான்கு சர்வதேச லேபிள்களை சந்தைப்படுத்துகிறது. இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ரிலையன்ஸ் யூனிட்டின் பிரத்யேக வலைதளம் மூலம் அழகுசாதன பொருட்களின் புதிய பிரிக் மற்ரும் மோர்டார் செயின்னையும் உருவாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் சிறந்த சர்வதேச பிராண்டுகள் மற்றும் அவற்றின் சொந்த லேபிள்களை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்கின் பராமரிப்பு, அழகு மற்றும் வாசனை திரவங்கள்

ஸ்கின் பராமரிப்பு, அழகு மற்றும் வாசனை திரவங்கள்

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் அவர்கள் விற்கும் பிராண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் ஸ்கின் பராமரிப்பு, அழகு மற்றும் வாசனை திரவங்கள் உள்ளிட்டவைகளை உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் சில்லறை விற்பனை மல்டிபிராண்ட் அழகு மற்றும் அழகு சாதனப் பொருட்களின் ஆன்லைன் சில்லறை விற்பனையில் ஈடுபட முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

உயர் ரக அழகுசாதன பொருட்கள்

உயர் ரக அழகுசாதன பொருட்கள்

ET அறிக்கையின்படி, ரிலையன்ஸ் பிரத்யேக வலைதளத்தின் மூலம் வியூகத்தை உருவாக்கி உயர் ரக அழகுசாதன பொருட்களின் புதிய சங்கிலியை உருவாக்குகிறது. அதேபோல் ரிலையன்ஸ் ரீடெயிலின் பேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் இணையதளமான ஏஜியோ-வில் அழகுசாதன பொருட்களுக்கான தயாரிப்புகளுக்கு ஒரு அங்காடி உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஸ்கின் மற்றும் ஹேர் பராமரிப்பு

ஸ்கின் மற்றும் ஹேர் பராமரிப்பு

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் ஐப்பானை தளமாகக் கொண்ட முஜி-ன் பரந்த அளவிலான ஸ்கின் மற்றும் ஹேர் பராமரிப்பு தயாரிப்புகளை கொண்டு வரும் என கூறப்படுகிறது. டாடா நிறுவனமும் இதேபோன்று சொந்தமாக டாடா டிஜிட்டல், அழகு மற்றும் அழகு சாதன பொருட்களை விற்க பிரத்யேக வலைதளத்தை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் ரீடெயில் மார்க்கெட் பிரிவில் குறிப்பிடத்தக்க ஒன்று அழகு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகும்.

டிஜிட்டல் யூனிட், டிஜிட்டல் பிளாட்பார்ம்கள்

டிஜிட்டல் யூனிட், டிஜிட்டல் பிளாட்பார்ம்கள்

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பக்கத்திற்கு செபோரா போன்ற ஒரு அழகு வணிகத்தை உருவாக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சிறந்த சர்வதேச பிராண்டுகளையும் தங்கள் சொந்த லேபிள்களுடன் விற்க தொடங்கும் என கூறப்பபடுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை கடனில்லா நிறுவனமாக மாற்றிவிட்டதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் யூனிட், டிஜிட்டல் பிளாட்பார்ம்களில் உலகின் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்தது மற்றும் நிறுவனத்தின் மெகா பங்கு விற்பனை ஆகியவை தான் ரிலையன்ஸ் குழுமத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கடனில்லா நிறுவனமாக மாற்ற உதவியது என அவர் குறிப்பிட்டார்.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம்

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்கிலிருந்து சுமார் 5.7 பில்லியன் டாலருக்கு மதிப்பிலான 9.9 சதவீத பங்கை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது, இந்திய மதிப்பின் படி இந்த ஒப்பந்தத்தின் விலை சரியாக 43,574 கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்தத்தால் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 65.95 பில்லியன் டாலராக உயர்ந்தது.

வாக்குறுதி நிறைவேற்றியதாக மகிழ்ச்சி

வாக்குறுதி நிறைவேற்றியதாக மகிழ்ச்சி

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ.1,61,035 கோடி கடன் சுமை இருந்தது. இதை 2021 மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைத்துக் கடனை தீர்ப்பதாக முகேஷ் அம்பானி உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே கடன் சுமை தீர்க்கப்பட்டு விட்டதாகவும் பங்குதாரர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றியுள்ளோம் என்ற அறிவிப்பால் மகிழ்ச்சியடைவதாகவும் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Retail Going to Sell Cosmetic Items through Online: Here the Details!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X