முகேஷ் அம்பானி குடும்பம் லண்டனில் குடியேற திட்டமா? உண்மை என்ன?
சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக லண்டனில் பக்கிங்ஹாம்சையரில் இருக்கும் 300 ஏக்கர் கிளப் ஒன்றை தங்கள் வசிப்பிடமாக மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

குறிப்பாக இது மும்பை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது என்றுதான் கூறவேண்டும். ஆனால் இந்த தகவல்களை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது. மேலும் இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் தனது குடும்பத்துடன் லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக முகேஷ் அம்பானி அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கும் ஆண்டிலியாவில் உள்ள 400,000 சதுர அடி பிரமாண்ட பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி அவர்கள் பிரிட்டனின் முதலாவதும், மிகப் பிரபலமானதும், வரலாற்று பின்னணியும் கொண்ட, ஆடம்பர தங்கும் விடுதியான ஸ்டோக் பார்க்கை சமீபத்தில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரிசார்ட் தான் இந்த ஸ்டோக் பார்க். குறிப்பாக அழகான தோட்டங்கள், கோல்ப் மைதானம், 49 ஆடம்பர அறைகள், பூங்கா, உணவகம் என பல
வசதிகளை கொண்டுள்ளது இந்த தங்கும் விடுதி.

அதேபோல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விடுதியை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் டிரம்ப் அவர்களுக்கு இந்த டீல் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. பின்பு இந்த விடுதியில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உட்பட பல ஹாலிவுட் படங்களும் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதுதான், என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று ரிலையன்ஸ் குழுமம் கூறியுள்ளது.. அதேபோல் வளர்ந்து வரும் நுகர்வோர் வணிகத்தை கருத்தில் கொண்டு இந்த சொத்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பல் துறையை, உலகளவில் விரிவுபடுத்தும் திட்டம்தான் எங்களிடம் உள்ளது என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய சாதனங்களை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் சாதனங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்..
News Source: economictimes


Click it and Unblock the Notifications