10ஜிபி 4ஜி டேட்டா ரூ.93 மட்டுமே, ஜியோ அதிரடி.!!

Written By:

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது 4ஜி சேவையை வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி அந்நிறுவனம் தனது சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நெட்வர்க் பயன்படுத்தி 4ஜி சேவைகளை வழங்கவும், முதற்கட்டமாக சுமார் 10ஜிபி 4ஜி டேட்டாவினை ரூ.93க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு அந்நிறுவனம் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நெட்வர்க்

01

அடுத்த வாரம் முதல் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 4ஜி நெட்வர்க் பயன்படுத்தி சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு

02

4ஜி சேவைக்கு அப்கிரேடு செய்ய ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்தச் சலுகையை பயன்படுத்தத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பிடிஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு

03

சுமார் 80 லட்சம் RCom சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களில் சுமார் 90% பேர் 4ஜி சேவைக்கு அப்கிரேடு செய்ய முன்பதிவு செய்திருப்பதாகவும் அந்நிறுவன தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவு

04

துவக்கத்தில் 10 ஜிபி 4ஜி டேட்டாவினை ரூ.93 வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்சமயம் சந்தையில் கிடைப்பதில் மிகக்குறைந்த விலையில் 4ஜி சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கின்றது.

விலை

05

ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்ப ரூ.93 முதல் ரூ.97 வரை 10ஜிபி 4ஜி டேட்டாவின் கட்டணங்கள் மாறுபட வாய்ப்புகள் இருக்கின்றதாக RCom இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்

06

முதற்கட்ட 4ஜி சேவைகளை வழங்க மும்பை, தில்லி, கொல்கத்தா, குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், கிழக்கு மற்றும் மேற்கு உத்திர பிரதேசம், மத்திய பிரதேஷ் மற்றும் பீகார் உள்ளிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அனுமதி

07

அந்நிறுவனம் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் அனுமதி பெற்று ஜூலை மாத இறுதியில் 4ஜி சேவையை வழங்க இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Reliance to offer 4G data at Rs 93 per 10GB Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot