தடைகளை உடை., மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி- எப்படி தெரியுமா?

|

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

கொரோனா தொற்று காரணமாக உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் கடுமையான தாக்கத்தை உணர்கின்றன. இந்தியாவாக இருந்தாலும் அமெரிக்காவாக இருந்தாலும், கொரோனா வைரஸ் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக பங்கு விலைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன.

ப்ளூம்பெர்க்கின் அறிக்கை

ப்ளூம்பெர்க்கின் அறிக்கை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உட்பட உலகம் முழுவதும் பலருக்கும் மார்ச் 9 மோசமான நாள். ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி இனி ஆசியாவின் பணக்காரர் அல்ல என்ற விஷயம் தான்.

Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் அலிபாபா குழுமம்

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் அலிபாபா குழுமம்

ப்ளூம்பெர்க் பில்லியனர்களின் குறியீட்டின்படி, மார்ச் 9 அன்று முகேஷ் அம்பானி தனது நிகர மதிப்பிலிருந்து 5.8 பில்லியன் டாலர்களை இழந்தார். இருப்பினும், அடுத்த நாள் அவர் 467 மில்லியன் டாலர்களை ஈட்டினார். அதேபோல் சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, முகேஷ் அம்பானியை முந்தி அவர் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரானார்.

முகேஷ் அம்பானி ஜேக் மா

முகேஷ் அம்பானி ஜேக் மா

முகேஷ் அம்பானியின் மதிப்பிடப்பட்ட நிகர மதிப்பு அப்போது 42.3 பில்லியன் டாலராக இருந்தது. அதேபோல் அப்போதைய நிலவரப்படி சீனாவின் ஜேக் மா-வின், நிகர மதிப்பு 45.7 பில்லியன் டாலர்கள் ஆகும்.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 12% குறைந்துவிட்டன

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 12% குறைந்துவிட்டன

மார்ச் 9 அன்று ஒரே நாளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 12% குறைந்துவிட்டன. கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பையும் பாதித்தது. கொரோனா வைரஸ் அலிபாபா குழுமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கிளவுட் கம்ப்யூட்டிங் செயலிகளுக்கான தேவை அந்த தாக்கத்தை சமநிலைப்படுத்தி மீட்டெடுத்தது.

ஜாக் மா மீண்டும் ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடம்

ஜாக் மா மீண்டும் ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடம்

இதையடுத்து முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 2018-ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்த அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா மீண்டும் ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அம்பானியின் சொத்து மதிப்பை விட 2.6 பில்லியன் டாலர் அதிகமாக சீன தொழிலதிபதிரான ஜாக் மாவின் நிகர சொத்து மதிப்பு 44.5 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம்

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம்

இந்த நிலையில், முகேஷ் அம்பானி நிர்வகித்து வரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனக் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஜியோ பிளாட்பார்ம்சின் 10% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இதற்காக ஃபேஸ்புக் ரூ43,574 கோடி அளவுக்கு முதலீடு செய்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் 10 சதவீதம் லாபம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் 10 சதவீதம் லாபம்

இதன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் 10 சதவீதம் லாபத்தை ஈட்டியது. இதனால் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த புதனன்று ஒரே நாளில் 4.7 பில்லியன் டாலர் உயர்ந்தது. அதேபோல் முகேஷ் அம்பானியன் சொத்து மதிப்பு 49.2 பில்லியன் டாலராக அதிகரித்தது.

PM Modi சொன்னது இதுக்கு தானா: 3 பேரை தனியா தூக்கிய ஆரோக்கிய சேது ஆப்- எப்படி தெரியுமா?PM Modi சொன்னது இதுக்கு தானா: 3 பேரை தனியா தூக்கிய ஆரோக்கிய சேது ஆப்- எப்படி தெரியுமா?

ஜாக் மாவை விட 3.2 பில்லியன் அதிக சொத்து

ஜாக் மாவை விட 3.2 பில்லியன் அதிக சொத்து

இதன் மூலம் சீனாவின் அலிபாபா குழும தலைவரான ஜாக் மாவை விட 3.2 பில்லியன் அதிக சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காராக உயர்ந்துள்ளார்.

source: businesstoday

Best Mobiles in India

English summary
Reliance mukesh ambani becomes asia's first richest person from facebook deal

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X