ஜியோ லைஃப் ஈஸி : உலகின் மிக மலிவான 4ஜி போன், 2017 ஜனவரியில் அறிமுகம்.!
ரிலையன்ஸ் ஜியோ விரைவில் உலகின் மிக மலிவான 4ஜி தொலைபேசிகளை விரைவில் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச மொபைல் அழைப்புகள் மற்றும் தரவு வழங்கி இந்திய தொலைத்தொடர்பு சந்தையை ஒரு கலக்கு கலக்கிய ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று காத்திருந்த போட்டியாளர்களுக்கு பேரிடியாய் இருந்தது - ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர்.
இனி 2017-ஆம் ஆண்டு மார்ச் இறுதி வரை ஜியோவுடன் போராட வேண்டிய கட்டாயத்தில் பிற நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்பது ஒருபக்கம் இருக்க, 4ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டி போட வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
அதாவது ரிலையன்ஸ் ஜியோ விரைவில் உலகின் மிக மலிவான 4ஜி தொலைபேசிகளை விரைவில் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை
லைஃப் ஈஸி என்ற உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருவி உலகின் மிக மலிவான 4ஜி போனாக இருக்கும் அதாவது இதன் விலை ரூ.1000/- இருக்கும் என்கிறது வெளியான அறிக்கை ஒன்று.

செயலி
உடன் வெளியாகும் இந்த ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்ப்ரெட்ட்ரம் (Spreadtrum) 9820 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் வோல்ட் ஆதரவு திறன் கொண்டிருக்கும் என்றும் அறிக்கை விவரிக்கிறது
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இணைப்பு வசதி
உடன் இந்த போன்களில் ஒரு நல்ல தரமான கேமிரா இருக்கும் வாய்ப்பும் உள்ளது மற்றும் ப்ளூடூத், வைஃபை இணைப்பு வசதி மற்றும் உங்கள் டேட்டாவை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் உள்ளடக்கிய ஹாட் ஸ்பாட் வசதியும் இக்கருவியில் இருக்கும்.

சலுகை
மேலும் அறிக்கைகள் படி, ரிலையன்ஸ் ஜியோ லைஃப் ஈஸி கைபேசிகளில் இலவச அழைப்புகளுக்கான சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புக்
முக்கியமாக இக்கருவி ஆன்லைனிலும் வாங்கும் வண்ணம் வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளன. ஒருமுறை தொலைபேசி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும், இக்கருவியை ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புக் செய்யலாம்.

மேலும் படிக்க
வெறும் 1 ரூபாயில் பெறுங்கள் : 128ஜிபி ஒன்ப்ளஸ் 3டி மற்றும் பல.!


Click it and Unblock the Notifications