PUBG கேமிற்கு போட்டியாக அம்பானியின் JioG கேம் உண்மையா? தீயாய் பரவும் செய்தி!

|

டிக்டாக் பயன்பாட்டை இந்தியா தடைசெய்த பின்னர், சீன வீடியோ தயாரிக்கும் பயன்பாட்டை மாற்றுவதற்காகப் பல "மேட் இன் இந்தியா" பயன்பாடுகள் வெளிவந்தன. இப்போது, ​​இந்தியா மிகவும் பிரபலமான PUBG அல்லது PlayerUnknown's Battlegrounds என்று அழைக்கப்படும் மல்ட்டி பிளேயர் விளையாட்டை தடை செய்துள்ளது. இதற்கு மாற்றான கேமாக அம்பானியின் JioG என்று கேம் இருக்கும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

PUBG மொபைல் கேமின் மீதான தடை

PUBG மொபைல் கேமின் மீதான தடை

PUBG மொபைல் கேமின் மீதான தடை, இந்த சீன பயன்பாட்டின் இடத்தை வேறொரு இந்தியப் பயன்பாடு ஆக்கிரமிக்குமா என்ற கேள்வி வலைத்தளத்தில் எழுந்துள்ளது. இதற்கு ஏற்றார் போல PUBG இன் மாற்றீடு குறித்த ஊகங்கள், நகைச்சுவைகள் மற்றும் மீம்ஸ்கள் என்று சமூக வலைத்தளம் பிஸியாக உள்ளது.

JioG கேமிங் பயன்பாடு அறிமுகமா?

JioG கேமிங் பயன்பாடு அறிமுகமா?

இதற்கிடையில் JioG கேமிங் பயன்பாடு என்று அழைக்கப்படும் ஒரு கேமிங் ஆப்ஸ் விரைவில் வெளியாகும் என்ற ட்வீட் வைரலாகி வருகிறது.இந்தியாவின் பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோஜி என்ற மொபைல் கேமை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளார் என்று ANI செய்தி நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.

Google எச்சரிக்கை! இந்த 6 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்! மீண்டும் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்!Google எச்சரிக்கை! இந்த 6 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்! மீண்டும் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்!

கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அம்பானி

கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அம்பானி

'JioG' என்பது பலர் சேந்து விளையாடும் மல்ட்டி பிளேயர் பயன்பாடாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் புகுந்துவிடுகிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால், உண்மை அது இல்லை, முகேஷ் அம்பானி அல்லது ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை இதுபோன்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை என்று தெரிகிறது.

உண்மை இதுதானா?

உண்மை இதுதானா?

இது தவிர, கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் ஜியோஜி என்ற பெயரில் எந்தவொரு பயன்பாடும் காணப்படவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நிலைமையை விசாரித்தபோது தான் உண்மை தெரிந்தது, ANI செய்தி நிறுவனம் என்ற பெயரில் ஒரு போலி கணக்கில் இருந்து இந்த செய்தி வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

JioG குறித்த வைரல் ட்வீட்

JioG குறித்த வைரல் ட்வீட்

JioG குறித்த ட்வீட் செய்தி ANI நியூஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருப்பதால், பலரும் இது உண்மை என்று நம்பிவிட்டனர். இந்த போலி செய்தியை இதுவரை சுமார் 2000 க்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டவர்கள் ரீட்வீட் செய்துள்ளனர்.

30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!

அம்பானியின் ஐடியா என்ன?

அம்பானியின் ஐடியா என்ன?

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அம்பானியின் அடுத்த ஐடியா என்னவாக இருக்கும் என்று யாருக்கும்தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
Reliance Launching New Mobile Game Named JioG After PUBG Banned In India? : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X