ரூ.16ல் புதிய வாட்ஸ்அப் திட்டத்தை வழங்கும் ரிலையன்ஸ்

Posted By: Karthikeyan
ரூ.16ல் புதிய வாட்ஸ்அப் திட்டத்தை வழங்கும் ரிலையன்ஸ்

இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தொலைத் தொடர்பு சேவையைச் செய்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகசேன்ஸ் நிறுவனம் நேற்று ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய திட்டத்திற்கு சிறப்பு வாட்ஸ்அப் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த சிறப்பு வாட்ஸ்அப் திட்டத்தில் இணைபவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.16 செலுத்தினால் அவர்கள் மாதம் முழுவதும் இலவசமாக வாட்ஸ்அப் அப்ளிகேசனை அக்சஸ் செய்ய முடியும். இந்த திட்டம் பேஸ்புக்கையும் இலவசமாக அக்சஸ் செய்ய உதவுகிறது. ஆனால் இந்த ஆபர் குறைந்த காலத்திற்கு மட்டுமே ரிலையன்சால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி ரிலையைன்ஸ் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் திட்டத்தைப் பெறவேண்டும் என்றால் அவர்கள் “WA” or “WhatsApp” or “FB” or “Facebook” என்று டைப் செய்து 53739 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

வாட்ஸ்அப் என்பது ஒரு ஐஎம் சேவையாகும். இந்த சேவை வாடிக்கையாளர்களின் போன்புக்கை இணைக்கிறது. இதே சேவையை ப்ளாக்பெரி நிறுவனமும் ப்ளாக்பெரி மெசஞ்சர் என்ற பெயரில் வழங்கியது.

ரிலையன்சின் இந்த புதிய திட்டம் மிகவும் மலிவானது. மேலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot