சென்னையில் ரிலையன்ஸ் ப்ரோ 3 டேட்டா அறிமுகம், அன்லிமிட்டெட் சந்தா வெறும் 999 தாங்க...
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சார்பில், நேற்று ப்ரோ 3 அல்ட்ரா பாஸ்ட் டேட்டா நெட்வர்க் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரோ 3, டேட்டா பயனாளிக்கு புதியதொரு அனுபவத்தை கொடுப்பதோடு தாமதமில்லாமல் 14.7 Mbps வேகத்தில் ஸ்ட்ரீமிங் செய்யவும் முடியும். முதல் கட்டமாக சென்னை, பெங்களூரூ, ஹைத்ராபாத் மற்றும் பூனேவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதோடு மற்ற நகரங்களில் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி குர்தாப் சிங், தற்சமயம் 4 நகரங்களில் மட்டும் கிடைக்கும் இந்த புதிய சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ப்ரோ 3 சேவைகள் அடுத்த கட்டமாக மும்பை மற்றும் டெல்லியில் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன், டேப்ளெட் மற்றும் லாப்டாப் பயனாளிகளுக்கு ப்ரோ 3 உபயோகமாக இருக்கும் என்றும் அதிக டேட்டா பயன்படுத்துவோருக்கு ஒரு அன்லிமிட்டெட் மாத சந்தா ரூ.999 என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்சமயம் 30 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனம் ப்ரோ 3 சேவைகளின் மூலம் மிகவும் வேகமான டேட்டா சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications