ஆல் ஷேர் சலுகையை வழங்கும் ரிலையன்ஸ்!

Posted By: Staff
ஆல் ஷேர் சலுகையை வழங்கும் ரிலையன்ஸ்!

தொலை தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ், ஆல் ஷேர் என்ற புதிய திட்டத்தினை அறிமுகம் செய்கிறது. ஆல் ஷேர் 499 என்ற புதிய திட்டத்தினை ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த ஆல் ஷேர் 499 என்ற இந்த பேக்கேஜ், கிட்டத்தட்ட டாடா டேக்கோமோ தொலை தொடர்பு சேவையின் மைஃபேமிலி ப்லான் போன்றது என்று கூறலாம். இந்த ஆல் ஷேர் 499 திட்டத்தில் நிறைய வசதியிகளை பெறலாம்.

அதாவது ரூ. 499 மாத கட்டணத்தில் 1,000 ஃப்ரீ லோக்கல் மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ்கள், 1,000 நிமிடங்கள் டாக் டைம் ஃப்ரீ (லோக்கல்/நேஷனல்), 2ஜி நட்வொர்க் 1 ஜிபி வரை ஃப்ரீ போன்ற சவுகரியங்களை எளிதாக பெற முடியும்.

இந்த ஃபேமிலி பேக்கேஜில் குறைந்தது 3 பேர் சேர்ந்து கொள்ளலாம். அதிகபட்சமாக 10 பேர் வரை இதை பயன்படுத்தி கொள்ளலாம். உதாரணத்திற்கு 3 பேர் என்று எடுத்து கொண்டால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ரூ. 499 மாத

கட்டணம் செலுத்திவிட வேண்டும். இதனால் மூன்று பேருக்கும் சேர்த்து ரூ. 1,497 என்ற கட்டணத்தில் மொத்தமாக 3,000 லோக்கல் மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ்கள், 3,000 நிமிடங்கள் வரை டாக் டைம், 2ஜி/3ஜி நெட்வொர்க் சேவை 1 ஜிபி வரை பயன்படுத்தி கொள்ளலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot