Home
News

குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : ரிலையன்ஸ் அதிரடி.!!

By Meganathan

இந்தியாவில் குறைந்த விலையில் மொபைல் போன்களை வழங்குவதில் பெயர்போன ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி அம்சம் கொண்ட புதிய கருவிகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் LYF பிரான்டை சேர்ந்த ஃபிளேம் 1 மற்றும் விண்ட் 6 4ஜி கருவிகளின் விலை மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : ரிலையன்ஸ் அதிரடி.!!

அதன் படி ஃபிளேம் 1 ரூ.6,490, LYF விண்ட் 6 ரூ.7,090 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கருவிகளும் இந்தியா முழுக்க சுமார் 1,20,000 சில்லறை வணிகர்களிடம் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைகளில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு..

LYF ஃபிளேம் 1

குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : ரிலையன்ஸ் அதிரடி.!!

ஃபிளேம் 1 கருவியில் 4..5 இன்ச் திரை 5 எம்பி ப்ரைமரி கேமரா, ப்ளாஷ், மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதோடு 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 1 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது.

குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : ரிலையன்ஸ் அதிரடி.!!

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொண்டிருக்கின்றது. 4ஜி எல்டிஇ, டூயல் சிம் செட்அப், வோல்டிஇ, வோ வை-பை, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் வி4.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களோடு 2000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

LYF விண்ட் 6

குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : ரிலையன்ஸ் அதிரடி.!!
ஃபிளேம் 1 கருவியை விட விண்ட் 6 சற்றே பெரிய கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 இந்ச் திரை, 5 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : ரிலையன்ஸ் அதிரடி.!!

8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் டூயல் சிம் வசதி, ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1, வோல்டிஇ, வோ வை-பை, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களோடு 2250 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance launches 4G mobiles starting at Rs 6490 Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X