அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: அழைப்பு நன்மைகளை தொடர்ந்து டேட்டா வேகத்தில் "கை வைத்த" ஜியோ.!
தற்சமயம் ஜியோ ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜியோ அதன் பயனர்களுக்கு வழங்கி வந்த வரம்பற்ற அழைப்பு நன்மை மீது வெறும் 300 நிமிடங்கள் மட்டுமே "வரம்பற்ற அழைப்புகள்" என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. சில ஜியோ பயனர்கள் இந்த அழைப்பு நன்மையை தவறாகப் பயன்படுத்துகின்ற காரணத்தினால் இந்த கட்டுப்பாடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ள நிலைப்பாட்டில் மற்றொரு கட்டுப்பாடு ஒன்றை புதிய திட்டத்தின் வாயிலாக ஜியோ நிகழ்த்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்சமயம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை கண்டிப்பாக ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் டவன்லோடு வேகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நெட்வோர்க், மேலும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த தொலைதொடர்பு நிறுவனம். அதன்பின் ஜியோபோன் வருகையால் பல சிறப்பு திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

ரூ.149-க்கு ரீசார்ஜ்:
தற்சமயம் ஜியோ ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 28நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த புதிய திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் மற்றும் 300எஸ்எம்எஸ் போன்றவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டா வேகம்:
இதற்க்கு முன்பு 2ஜிபி பயன்பாடு நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 128கேபி-யாக குறைக்கப்படும், மேலும் இப்போது வந்த புதிய அறிவிப்பில் நொடிக்கு 64-கேபி-யாக குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.96-க்கு ரீசார்ஜ்:
ஜியோ ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும், மேலும் இந்த திட்டம் ஏழு நாட்களுக்கு மட்டுமே பயன்படும் வீதம் உள்ளது. இந்த திட்டத்தில் டேட்டா பயன்பாடு நிறைவுற்றதும் வேகம் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனம் தற்போது ஜியோவுக்கு போட்டியாக புதிய திட்டத்தை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் ஏர்டெல் ரூ.499-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஏர்டெல் ரூ.549-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications