வெறும் ரூ.199/-க்கு ஜியோ போஸ்ட்பெயிட் அறிமுகம்; 2 நாளில் ஏர்டெல் காணாமல் போகும்.!
நேற்று (வியாழனன்று), முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன், ஜியோ போஸ்ட்பெயிட் (JioPostPaid) என்று பெயரிடப்பட்ட புதிய போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிவித்தது.
நேற்று (வியாழனன்று), முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன், ஜியோ போஸ்ட்பெயிட் (JioPostPaid) என்று பெயரிடப்பட்ட புதிய போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிவித்தது.

மலிவான விலை, அதிக நன்மைகள் என்கிற ஜியோ ப்ரீபெயிட் திட்டங்ககளின் அதே பாணியை ஜியோ போஸ்ட்பெயிட் திட்டமும் கொண்டுள்ளது. ஆக, இந்திய டெலிகாம் சந்தையில் மேலுமொரு குறிப்பிடத்தக்க தாக்கம் மற்றும் இடஹர நிறுவனங்களுக்கான பாதிப்பு ஆகியவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிமுகம்: ஜியோ போஸ்ட்பெயிட் (JioPostPaid).!
அறிமுகமான ஜியோ போஸ்ட்பெயிட் (JioPostPaid) திட்டமானது. மாதத்திற்கு ரூ.199/- என்கிற விலையை கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எந்தவொரு பாதுகாப்பு வைப்பு நிதியும் தேவையில்லை. குறிப்பாக டேட்டா நன்மை மட்டுமின்றி, இந்த திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதுமான ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளையும் பயனராகில் அனுபவிக்கலாம்.

எவ்வளவு டேட்டா வழங்கும்.?
டேட்டா நன்மையை பொறுத்தவரை, ரூ.199/- ஆனது மொத்தம் 25 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. முன்னர் குறிப்பிடப்படியே இதன் செல்லுபடியாகும் காலம், ஒரு மாதம் ஆகும். வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைளுடன் சேர்த்து, இந்த ஜியோ போஸ்ட்பெயிட் திட்டமானது, அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு நிமிடத்திற்கு 50 பைசா என்ற விகிதத்தில் சர்வதேச அழைப்புகளை செய்யும் விருப்பத்தையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

"ஸீரோ-டச்" திட்டம் என்று அழைக்கப்படுகிறது.!
இருந்தாலும் மற்ற நாடுகளுக்கு நிகழ்த்தப்படும் அழைப்பு கட்டண விகிதங்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு நிமிடத்திற்கு 6 ரூபாய் என்கிற கட்டணம் வசூலிக்கப்படும். நிறுவனத்தின் இந்த புதிய போஸ்ட்பெயிட் திட்டமானது, "ஸீரோ-டச்" திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

அதிகாரபூர்வமான பெயர் காரணம்.?
"ஸீரோ-டச்" - என்பதின் அதிகாரபூர்வமான அர்த்தம் என்ன என்பதில் தெளிவு இல்லை. ஒருவேளை, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கு, எந்தவொரு பாதுகாப்பு வைப்பு நிதியும் தேவையில்லாத திட்டம் மற்றும் "ப்ரீ-ஆக்டிவேட்டட்" திட்டம் என்பதால் இந்த பெயரை பெற்று இருக்கலாம்.

ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு செக் மேட்.!
தற்போது வரையிலாக ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களின் போஸ்ட்பாய்ட் திட்டங்களைப் பயன்படுத்துகின்ற நுகர்வோர் இலக்காக கொண்டு களம் காணும் இந்த ரூ.199/- ஆனது, ஏர்டெல் மற்றும் வோடபோனை ஒருவழி செய்து விடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மலிவான போஸ்ட் திட்டமானது ரூ.499/-க்கு தான் தொடங்குகிறது.

குறைந்த செலவில் கிடைக்கிக்கூடிய மிகச்சிறந்த போஸ்ட்பெயிட் ரீசார்ஜ்.!
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499/- ஆனது இன்ஃபினிட்டி பிளான்கள் என்று அழைக்கபட மறுகையில் உள்ள வோடபோன் திட்டங்கள் ஆனது ரெட் பிளான்ஸ் என்று அழைக்கபடுகிறது. இந்த இரண்டு வகையான திட்டங்களிலுமே ரோமிங் அழைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜியோவின் ரூ.199/- ஆனது குறைந்த செலவில் கிடைக்கிக்கூடிய மிகச்சிறந்த போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் திட்டாக திகழும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications