OLXல் விற்பனைக்கு வந்த ஜியோ போனை ஏன் வாங்க கூடாது?

By Siva
|

சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ரூ.1500க்கு புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்து அந்த போனை மீண்டும் 36 மாதங்கள் கழித்து திருப்பி அளித்துவிட்டு ரூ.1500ஐ பெற்று கொள்ளலாம் என்று அறிவித்தது.

OLXல் விற்பனைக்கு வந்த ஜியோ போனை ஏன் வாங்க கூடாது?

கடந்த ஆகஸ்ட் மாதம் முன்பதிவு செய்த சுமார் ஆறு மில்லியன் செல்போன்கள் விநியோகம் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் கைகளில் இந்த போன்கள் தவழ்ந்து வருகிறது. இந்த போன் நகரத்து மக்களை விட கிராமப்புற மக்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஜியோ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் முன்பணம் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்துவிட்டு மில்லியன் கணக்கானோர் இந்த போனின் வருகைக்காக காத்திருக்கும் நிலையில் இந்த போன் ஆன்லைன் விற்பனை இணையதளமான OLXல் விற்பனைக்கு வந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் OLXல் ஜியோ போன்கள் ரூ.700 முதல் ரூ.2499 வரை கிடைப்பதாகவும், ஒருசில போன்கள் பேக்கிங் பிரிக்கப்படாத நிலையிலேயே விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வேற போன் வாங்கிடாதீங்க.! 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வேற போன் வாங்கிடாதீங்க.! 4000எம்ஏஎச் பேட்டரியுடன் "சூப்பர் பட்ஜெட்" விலையில் நோக்கியா 2.!

முன்பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருப்பதற்கு பதில் OLXல் வாங்கிவிடலாம் என்று கருதுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஜியோ நிறுவனம் ஒருசில நிபந்தனைகளுடன் தான் இந்த போனை விற்பனை செய்துள்ளது.

இந்த போனை வாங்குபவர்களுக்கு விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ, ஒருவரிடம் இரவல் தரவோ உரிமை இல்லை. ஒருவரது பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட போனை இன்னொருவர் வாங்கி உபயோகப்படுத்துவது விதிகளுக்கு முரணானது ஆகும்

ஜியோ போனை ஆன்லைனில் வாங்கும் நபர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிம் உடன் கூடிய இந்த போனை வாங்கியவர் அவருடைய அடையாள அட்டையை கொடுத்து தான் சிம் மற்றும் போனை வாங்கியிருப்பார்.. இடையில் திடீரென மீண்டும் அடையாள அட்டையை நிறுவனம் கேட்டால் அந்த சமயத்தில் நீங்கள் விற்பனை செய்த நபரை தேடி கண்டுபிடிக்க முடியாது. மேலும் திருப்பி அளிக்கப்படும் ரூ.1500ஐ சிம் மற்றும் போனை பெற்றவர் மீண்டும் தனது அடையாள அட்டையை கொடுத்து மட்டுமே திரும்ப பெற முடியும்

மேலும் சிம் மற்றும் போன் வாங்கியவர் தவிர வேறொருவர் உபயோகிப்பதாக தெரிய வந்தால் ஜியோ நிறுவனம் அந்த போனை பறிமுதல் செய்ய உரிமை உண்டு. மேலும் போனை விற்பனை செய்பவர் தவறான விஷயத்திற்கு அந்த போனை பயன்படுத்தியிருந்தால் அதன் விளைவுகள் அந்த போனை வாங்கியவருக்கே ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance JioPhone is now available on OLX starting from a price point of Rs. 700 but here is why you should not buy it.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X