ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன்.? நம்ப முடியாத மாஸ்டர் பிளான்.!

By Prakash
|

இந்தியாவில் அனைத்துப் பகுதியுலும் மிக அதிகமாக பேசப்படுவது இந்த ஜியோ பீச்சர் போன், இந்த மொபைலில் உள்ள சிறப்புகளைப் பார்ப்போம். இந்தியாவில் இந்த மொபைல் போன் மிகப் பெரிய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜியோபோன் அனைவருக்கும்
இலவசமாக வழங்குவதாகவும் இதனை வாங்குவோர் ரூ.1500 செலுத்த வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்தது.

இப்போது ரூ.1500 செலுத்தினால் இந்த ஜியோபோனை பெறமுடியும்,அதன்பின் மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த பணம் திரும்ப வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

முகேஷ் அம்பானி:

முகேஷ் அம்பானி:

இந்த 4ஜி வசதி கொண்ட ஜியோபோனை ஒரு பெரிய நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் அந்நிகழ்ச்சியில் ஜியோபோனை பற்றிய முழுத் தகவல்களையும் மேடையில் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.

ஒற்றை சிம் கார்டு:

ஒற்றை சிம் கார்டு:

தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட 4ஜி வசதி கொண்ட ஜியோபோன் பொறுத்தவரை ஒற்றை சிம் கார்டு சிம்கார்டு போடும் வசதி மட்டுமே உள்ளது. இரட்டை சிம் வசதி கொண்ட பீச்சர் போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

பீச்சர் போன் ஜியோ சிம்:

பீச்சர் போன் ஜியோ சிம்:

இந்த ஜியோ பீச்சர் போன் பொதுவாக ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மற்ற தொலைத் தொடர்புகளின் சிம் இவற்றில் பயன்படுத்த முடியாத வண்ணம் உள்ளது. எனவே ஏர்டெல், வோடபோன், ஐடியா, போன்ற தொலைத் தொடர்புகளின் சிம்களை இவற்றில் பயன்படுத்த முடியாது.

 செப்டம்பர் மாதம்:

செப்டம்பர் மாதம்:

ஜியோ பீச்சர் போன் வரும் செப்டம்பர் மாதம் விற்பனை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்பதிவு ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் தொடங்கும் என ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

 ரூ.309-க்கு ரீசார்ஜ்:

ரூ.309-க்கு ரீசார்ஜ்:

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பீச்சர் போன் உடன் புதிய கேபிள் ஒன்றை அறிமுகம் செய்துவைத்துள்ளது. இவை டிவியுடன் இனைத்து வீடியோக்களை பார்க்கும் வசதி செய்துதரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது, அதன்படி கேபிள் வாங்கும் போது ரூ.309-க்கு திட்டத்திற்க்கு ரீசார்ஜ் செய்யவேண்டும். இந்த சேவை 29நாட்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது, தினசரி 1ஜிபி டேட்டா பயன்படும்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள்:

தொலைத் தொடர்பு நிறுவனங்கள்:

ஜியோவின் இந்த பீச்சர்போன் பொறுத்தவரை மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து இப்போது ஜியோ பீச்சர்போனுக்கு போட்டியாக மைக்ரோமேகஸ் நிறுவனம் புதிய 4ஜி வசதி கொண்ட பீச்சர் போனை தயார் செய்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Reliance JioPhone is a single SIM device Heres everything you need to know; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X