டூயல் சிம் ஜியோபோன் வரும் அக்டோபரில் அறிமுகம்

Written By:

அனைவரும் வெகு ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஜியோபோன் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படவுள்ளதாக சேவை மனப்பான்மையுடன் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

டூயல் சிம் ஜியோபோன் வரும் அக்டோபரில் அறிமுகம்

குறிப்பாக ஜியோபோன் உள்நாட்டிலேயே ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஜாம்பவானாக உள்ள மைக்ரோமேக்ஸ் மற்றும் இண்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் தயாரிப்பதற்கான ஒப்பந்ததை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த ஜியோபோனை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு ஒரு நயா பைசா கூட செலவு செய்ய தேவையில்லை. ஆனால தே நேரத்தில் செக்யூடிரிட்டி டெபாசிட் ஆக ரூ.1500 செலுத்த வேண்டும்.

இந்த பணம் மூன்று வருடங்கள் கழித்து 100% திருப்பி அளிக்கப்படும். மேலும் தற்போது இந்த போன் சிங்கிள் சிம் ஆக வெளியாகவுள்ளதாகவும் இன்னும் ஒருசில மாதங்களில் இந்த போனில் இரண்டு சிம் வசதிகளுடன் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

தி மொபைல் இண்டியன் என்ற டெக்னாலஜி ஊடகத்தின் செய்தியின்படி பார்த்தால் டூயல் சிம் போன் வரும் அக்டோபரில் இருந்து வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போனில் முதல் சிம்மில் ரிலையன்ஸ் 4G சிம் மட்டுமே உபயோகப்படுத்த முடியும்.

இரண்டாவது சிம்மில் 2G சப்போர்ட் செய்யும் சிம்கார்டு மட்டுமே பொருத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து சந்தேகங்கள் இருந்தால் ஜியோபோனின் விபரங்கள் அடங்கிய குறிப்புகளை அதன் இணையதளத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்

ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இந்த ஜியோபோனில் உள்ளது. மேலும் இந்த போனில் வாய்ஸ் அசிஸ்டெண்ட் சப்போர்ட் டெக்னாலஜி உள்ளது அதுமட்டுமின்றி ரூ.309 மாதக்கட்டணத்தில் ஜியோ ஃபோன் கேபிள் டிவியும் இந்த போனில் பயன்படுத்தலாம்Read more about:
English summary
JioPhone to arrive with dual SIM support soon.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot