ஜியோபோன் : வலைத்தளம் & எஸ்எம்எஸ் மூலம் எளிமையாக முன்பதிவு செய்வதெப்படி.?
ஜியோ Nghd; கொண்டு ஸ்கிரீன் மிரரிங் அம்சம் பயன்படுத்தலாம். இதற்கான மென்பொருள் அப்டேட் போன் வெளியானதும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 24-ம் தேதி ஜியோ 4ஜி பீச்சர் போனை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது, மேலும்பல்வேறு மக்கள் இந்த பீச்சர் போனை வாங்குவார்கள் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆஃப்லைன் மூலம் இந்த பீச்சர்போனை மிக எளிமையாக முன்பதிவு செய்யமுடியும்.

இந்த பீச்சர் போன் வாங்க முதலில் ரூ.1500 வரை டெபாசிட் செய்ய வேண்டும் பின்பு இந்தப் பணத்தை 3 வருடத்திற்குபின் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பீச்சர் போனை முன்பதிவு செய்யும் வழிமுறையைப் பார்ப்போம்.

ஆன்லைன் முன்பதிவு வழிமுறை-1:
முதலில் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும், அதவாது ஜியோ .காம் (Jio.com.) வலைதளத்திறக்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-2:
முகப்புப்பக்கத்தில் "அறிமுகம் இந்தியா கா ஸ்மார்ட்போன் ஜியோபோன்" பதாகையில் கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:
பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பெயர், தொடர்பு எண், மின்னஞ்சல், ஐடி மற்றும் பின் குறியீடு ஆகிய தகவல்களை நிறப்ப வேண்டும்.

வழிமுறை-4:
விதிமுறைகள் மற்றும் நிபந்தனை விருப்பத்தேர்வை சரிபார்க்க வேண்டும்.

வழிமுறை-5:
பின்பு இறுதியில் சமர்ப்பிக்க கிளிக் செய்ய வேண்டும். சமர்ப்பித்தவுடன் உங்களுடைய விவரங்களை நாங்கள் பெற்றுள்ளோம், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம், நன்றி ஜியோ என அந்த வலைப்பக்கத்தில் தெரிவிக்கும்.

ஆஃப்லைன் முன்பதிவு வழிமுறை:
ஆஃப்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வழிமுறைப் பொறுத்தவரை நீங்கள் செய்ய வேண்டியது எஸ்எம்எஸ் ஜேபி (உங்கள் பகுதி பின் குறியீடு) ஸ்டோர் கோட் 7021170211 இந்த வழிமுறையை பின்பற்றி எஸ்எம்எஸ் அனுப்பினால் முன்பதிவு செய்ய முடியும். அதன்பின் விரைவில், ஜியோவில் இருந்து பின்வரும் செய்தியைப் பெறுவீர்கள் "ஜியோபோனில் உள்ள உங்கள் ஆர்வத்திற்கு நன்றி எனத் தகவல் வரும்.

2ஜி கனெக்டிவிட்டி :
ஜியோபோனில் மற்ற நெட்வொர்க் சிம் கார்டுகள் வேலை செய்யாது என ஜியோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் ஏர்டெல், ஐடியா, பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்களின் சிம் கார்டுகளை ஜியோபோனில் பயன்படுத்த முடியாது. எனினும் இதற்கு மாறாக ஜியோபோனில் மற்றொரு சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இதில் 2ஜி கனெக்டிவிட்டி மற்றும் மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

வாய்ஸ் கமான்ட் வசதி :
ஜியோபோனில் வாய்ஸ் கமான்ட் வசதி மற்றும் 22 இந்திய மொழிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜியோபோனில் ஜியோ டிவி கேபிள் வாடிக்கையாளர்களை தங்களது டிவியுடன் இணைக்க முடியும்.


Click it and Unblock the Notifications