Home
News

அம்பானியின் இன்னொரு முகம்.. 10,000 Jio ஊழியர்களின் குடும்பங்கள் என்ன ஆகப்போகிறதோ.. பாவம்!

உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்து இருக்கலாம், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் (Reliance) நிறுவனத்தின் கீழ் இ-காமர்ஸ் தளம் (e-commerce platform) ஒன்றும் செயல்படுகிறது. அது ஜியோ மார்ட் (JioMart) என்று அழைக்கப்படுகிறது.

தற்போது அந்நிறுவனமானது சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் (Layoff) செய்துள்ளது. மேலும் வரவிருக்கும் வாரங்களில், ஜியோமார்ட் நிறுவனமானது இன்னும் பலரையும் பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி மொத்தம் 9,900 ஜியோமார்ட் ஊழியர்கள் (JioMart Employees) தங்கள் பணிகளை இழக்க உள்ளனர்.

10,000 Jio ஊழியர்களின் குடும்பங்கள் என்ன ஆகப்போகிறதோ.. பாவம்!

தி எகனாமிக் டைம்ஸ் (Economic Times) அறிக்கை ஒன்றின்படி, ஜியோமார்ட் ஊழியர்கள் ராஜினாமா (Resignation) செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிறுவனம் கடந்த சில நாட்களாகவே அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் 500 நிர்வாகிகள் (Corporate Office Executives) உட்பட 1,000 க்கும் மேற்பட்டவர்களை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஜியோமார்ட் ஊழியர்கள் பிஐபி (PIP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்ஃபார்மென்ஸ் இம்ப்ரூவ்மென்ட் பிளானின் கீழ், அதாவது செயல்திறன் மேம்பாட்டு திட்டத்தின் (Performance Improvement Plan) கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரிய அளவிலான பணிநீக்கங்களை நடத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஜியோமார்ட் ஊழியர்களில் ஒருவர் கூறி உள்ளார்.

கிட்டத்தட்ட 10,000 பேரின் வேலைகளை பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், ஜியோமார்ட் நிறுவனமானது இன்னும் அதிக பணம் சம்பாதிப்பதிலும், அதன் லாபத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த விரும்புகிறதாம். பணிநீக்கம் மட்டுமின்றி நிறுவனத்தின் லாபத்தை மேம்படுத்த, பாதிக்கும் மேற்பட்ட ஃபுல்ஃபில்மென்ட் சென்டர்களை (Fulfillment centers) மூடவும் திட்டமிடபட்டுள்ளதாம்.

அறியாதோர்களுக்கு ஃபுல்ஃபில்மென்ட் சென்டர் என்பது, பொருட்களை தயாரித்து உள்ளூர் கடைகளுக்கு அனுப்பு இடங்களாகும். ஜியோமார்ட் ஆனது மிகக் குறைந்த விலைகளை கொண்டிருந்தது. எந்த அளவிற்கு குறைவான விலை என்றால், பாரம்பரிய விநியோகஸ்தர்கள் (Traditional distributors) தங்கள் விநியோகங்கள் பாதிக்கப்படும் என்று கவலைப்படும் அளவிற்கு குறைவாக இருந்தது.

ஆனால் இப்போது, ​​ஜியோமார்ட் நிறுவனமானது அதிக லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்தி, நிறுவனத்தின் நஷ்டத்தை குறைத்து வருகிறது. அதனொரு பகுதிதான் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வது என்பதில் சந்தேகமே வேண்டாம். இதன் பின்னர் ஜியோமார்ட் நிறுவனத்தின் வியூகங்கள் எல்லாமே மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆனது, மெட்ரோ ஏஜி (Metro AG) என்ற ஜெர்மன் நாட்டை சேர்ந்த சில்லறை விற்பனையாளரின் இந்திய வணிகத்தையும் (Indian business of a German retailer) வாங்கி உள்ளது. இதற்காக அம்பானியின் நிறுவனம் 344 மில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்துள்ளது; ஜியோமார்ட் நிறுவனத்தில் நடக்கும் நடவடிக்கைகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

மேற்கண்ட எல்லா நடவடிக்கைகளுமே ஜியோமார்ட் நிறுவனமானது அதிக பணம் சம்பாதிக்க விரும்புகிறது, தனது செயல்பாடுகளை மிகவும் திறமையானதாக்கி, லாப வரம்புகளை மேம்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடித்து வருகிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இந்தியாவில், ஆன்லைன் சில்லறை சந்தையானது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance JioMart Fired 1000 Employees Also Planning To Layoff Many More To Making More Money
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X