அட்டகாசமான பிரீவியூ சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம்.!
பிராட்பேண்ட் சேவைக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் அதிகளவு முன்பதிவு செய்யும் இடங்களில் சேவை வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜிகா பைபர் பிராட்பேன்ட சேவை ஆகஸ்ட் 15ம் தேதி துவங்கப்பட்டது.
பிராட்பேண்ட் சேவைக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் அதிகளவு முன்பதிவு செய்யும் இடங்களில் சேவை வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதைதொடர்ந்து ஜியோ ஜிகா பைபர் முன்பதிவுகளும் நடந்து வருகின்றது. இதற்காக பிரீவியூ சலுகை வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரீவியூ சலுகை:
தற்போது சேவைகள் முழுமையாக துவங்கப்படும் முன்பே சில வாடிக்கையாளர்களுக்கு பிரீவியூ சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரீவியூ சலுகையின் படி ஜியோ ஜிகா பைபர் சேவையை பயன்படுத்துவோருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு வேகத்தை சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

300 ஜிபி டேட்டா:
இதையொட்டி 90 நாட்களுக்கு மொத்தம் 300 ஜிபி டேட்டா பிரீவியூ சலுகையின் கீழ் வழங்கப்படுகின்றது. இந்த டே;டாவில் மாதம் 100 ஜிபி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுதும் குறிப்பிடக்கதக்கது.

100 ஜிபி டேட்டா:
100 ஜிபி டேட்டாவை ஓரே மாத்திற்குள் பயன்படுத்தாவிட்டால், பிரீவியூ சலுகையை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகிறது. பிரிவீயூ சலுகையில் மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைதளம் மூலம் சேர்பர்களுக்கு 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

நொடிக்கு 1 ஜிபி வேகம்:
ஜியோ ஜிகா பைபர் திட்டத்தில் டேட்டா வேகத்தை பொருத்த வரை நொடிக்கு 1ஜிபி வேகம் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் பயனர்கள் 4 கே தரம் கொண்ட வீடியோக்களையும் ஸ்டீம் செய்து பார்க்க முடியும்.
மேலும், முன்பதிவு செய்வோருக்கு வலைதளத்தில் ஜிகாபிட் பிராட்பேண்ட் சேவை பயன்படுத்தும் போதும் விர்சுவல் ரியாலிட்டி கேம்களை விளையாட முடியும்.

ரூ.4500 முன்பணம்:
இந்த திட்டத்திற்கு முன்பணமாக ரூ.4500 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் ஜிகாஹப் ஹோம் சேவைக்கான நுழைவுதளமான இருக்கும். முதற்கட்ட முன்பண கட்டணம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜீயோ மணி அல்லது பேடிஎம் மூலம் செலுத்த முடியும். வயர்லெஸ் சேவை போன்ற பிராட்பேன்ட் சேவைகளும் பிரீபெயிட் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications