Home
News

பைபர்நெட் இண்டர்நெட் சேவையை தொடங்குகிறது ரிலையன்ஸ்.!

இந்த சேவையை நீங்கள் பெற வேண்டுமானால் ஒருமுறை மட்டும் செக்யூரிட்டி டெபாசிட் ஆக ரூ.4500 கட்ட வேண்டும்.

By Siva Lingam

ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் பிராட்பேண்ட் மார்க்கெட்டில் நுழைய இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தது. மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் ஜியோஃபைபர் வசதியை தற்போது சோதனை முறையில் செய்து பார்த்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் ஜியோஃபைபர் தொடங்கும் நாள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பைபர்நெட் இண்டர்நெட் சேவையை தொடங்குகிறது ரிலையன்ஸ்.!

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஜியோஃபைபர் வசதியை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே அடுத்த வருடம் முதல் தற்போது பிராட்பேண்ட் தொழிலில் ஜாம்பவனாக இருக்கும் நிறுவனங்களுக்கு ஆப்பு தயாராகிவிட்டது என்றே அர்த்தம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.

ஜியோஃபைபர்

ஜியோஃபைபர்

இதுவரை இந்தியாவில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே ஜியோஃபைபர் குறித்த சோதனையை முடித்துள்ளது. இந்த நிலையில் இந்த ஜியோஃபைபர் வசதி அறிமுகம் செய்யப்பட்டாலும் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு மட்டுமே இப்போதைக்கு இந்த சேவையை தொடரவுள்ளது. சில காலங்கள் கழித்து அடுத்தடுத்த பெரிய நகரங்களுக்கும் இந்த ஜியோஃபைபர் சேவை கிடைக்கும் என தெரிகிறது.

செக்யூரிட்டி டெபாசிட்

செக்யூரிட்டி டெபாசிட்

இந்த ஜியோஃபைபர் முறையில் பயனாளிகள் மாதம் ஒன்றுக்கு 100ஜிபி வரை மூன்று மாதங்களுக்கு 10 எம்பிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இந்த சேவையை நீங்கள் பெற வேண்டுமானால் ஒருமுறை மட்டும் செக்யூரிட்டி டெபாசிட் ஆக ரூ.4500 கட்ட வேண்டும். இந்த கட்டணம் செக்யூரிட்டி டெபாசிட் மட்டுமின்றி ரவுட்டருக்கும் சேர்த்தே என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இந்த ரவுட்டரின் விலை ரூ.8000ஆக இருந்தாலும் பயனர்கள் வெறும் ரூ.4500 மட்டும் கட்டினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது

டெக்னாலஜி

டெக்னாலஜி

இந்த ஜியோஃபைபர் சேவை ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினேஷன் என்ற டெக்னாலஜியில் இயங்கவுள்ளது. இதன்படி இந்த ஒரே ஒரு ரவுட்டர் மூலம் இண்டர்நெட், லேண்ட்லைன் தொலைபேசி, கேபிள் டிவி, ஹோம் ஆட்டோமேஷன் மற்றும் ஹோம் சர்வைலன்ஸ் ஆகியவற்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு முழு பேக்கேஜ் ஆக வரும் இந்த ஜியோஃபைபர் ரவுட்டர் கருவியின் மூலம் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் இயங்கி கொண்டிருக்கும் பிராண்ட்பேண்ட் சேவை நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்களான டாட்டா ஸ்கை, டிஷ் டிவி, மற்றும் ஒருசில நிறுவாங்களின் சேவைகள் பாதிக்கபப்டும் என தெரிகிறது. இந்த சேவை குறித்த வெளியாகியுள்ள செய்தியின் புகைப்படங்களில் இருந்து இந்த ஜியோஃபைபர் சேவையில் ஒரு ரிமோட் கண்ட்ரோலும் உண்டு. மேலும் இந்த ரவுட்டரின் முழு செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ரிலையன்ஸ் நிறுவனம்

ரிலையன்ஸ் நிறுவனம்

சமீபத்தில்தான் ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் இந்தியாவில் ஒரு புரட்சியை 4ஜி சேவை மூலம் செய்துள்ளது. அதேபோல் பிராட்பேண்ட் சேவையிலும் இந்தியாவில் ஒரு புதிய அத்தியாயத்தை இந்த ஜியோஃபைபர் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் நிச்சயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் கூட்டத்தில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1.2 மில்லியன்

1.2 மில்லியன்

இந்தியாவில் ஒருசில பிராட்பேண்ட் சேவை நிறுவனங்கள் வலுவாக உள்ளது. குறிப்பாக ஏசிடி பைபர்நெட் இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய இண்டர்நெட் சேவை நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்திற்கு சுமார் 1.2 மில்லியன் பயனாளிகள் உள்ளனர்.அதேபோல் இன்னொரு நிறுவனமான டிகோனே நிறுவனமும் முதல் மூன்று இடத்தில் இருப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள 25 முக்கிய நகரங்களில் 2.75 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Reliance JioFiber with 100GB per month at 100Mbps speed may launch soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X