1000ஜிபி டேட்டாவை வெறும் ரூ.199 விலையில் வழங்கி அதிரவிட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ.!

|

ஜியோ ஃபைபர் இந்தியாவில் மிகவும் பிரபலமான முன்னணி ஃபைபர் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் ஒருவராக மாறியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில், ஜியோ ஃபைபர் ஒரு டன் இணையச் சேவை வழங்குநர்களை (ஐஎஸ்பி) வென்று அவர்களுக்கு முன்னால் சென்று முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் ஆர்ம் சேவை மக்களால் கவனிக்கப்பட்டு ஈர்க்கப்பட்டுள்ளது.

1000 ஜிபி டேட்டா வெறும் ரூ.199 விலையிலா? உண்மை தானா?

1000 ஜிபி டேட்டா வெறும் ரூ.199 விலையிலா? உண்மை தானா?

தெரியாதவர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ 1TB அல்லது 1,000GB வரையிலான டேட்டாவை வெறும் ரூ .250 என்ற விலைக்கும் குறைவான விலையில் வழங்கி வருகிறது. இந்த திட்டம் உண்மையில் என்ன நன்மைகளை வழங்குகிறது? யாருக்கெல்லாம் இந்த திட்டம் கிடைக்கும்? ஜியோ பைபர் பயனர்கள் இதிலிருந்து என்ன-என்ன நன்மைகளை எதிர்பார்க்கலாம் என்பது போன்ற விஷயங்களை இப்போது பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ பைபர் வழங்கும் 1 டிபி டேட்டா திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ பைபர் வழங்கும் 1 டிபி டேட்டா திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ஃபைபர் ஆர்ம் சேவை, ஜியோ ஃபைபர் பயனர்களுக்கு 1TB டேட்டாவை வெறும் ரூ .199 என்ற விலைக்கு வழங்குகிறது (வரிகளைத் தவிர்த்து). ஜியோ ஃபைபர் ரூ .199 விலையில் கிடைக்கும்இந்த 1TB டேட்டா திட்டமானது பயனருக்கு 7 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. பயனர்கள் 100 Mbps வேகத்தில் இந்த திட்டத்தைப் பெறுகிறார்கள். FUP டேட்டா கொள்கையின் படி அந்த டேட்டாவை பயன்படுத்திய பிறகு, பயனர் 1 Mbps வேகத்தில் மீண்டும் டேட்டாவை பயன்படுத்தலாம்.

சந்திரன் சந்திரன் "தள்ளாட்டம்".. 2030-களில் கடலோரம் இப்படியொரு பிரச்சனை வருமா? நாசா திடுக்கிடும் தகவல்.!

எத்தனை நாட்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும்?

எத்தனை நாட்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும்?

இந்த திட்டத்தைத் தேர்வு செய்த பயனர்களுக்கு, இந்த 1 TB டேட்டா நன்மையுடன் செல்லுபடியாகும் 7 நாட்களுக்கு இலவச குரல் அழைப்பு நன்மையையும் கிடைக்கிறது. இந்த திட்டம் எந்தவித வரியும் சேர்க்கப்படாமல் ரூ. 199 விலையில் வருகிறது என்று முன்பே தெரிவித்திருந்தோம். இந்த திட்டத்திற்கான வரி சேர்க்கப்பட்டால், இந்த திட்டத்தின் விலை ரூ. 235க்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. தோராயமாகச் சொல்லப் போனால் வெறும் ரூ.250 விலைக்குள் 1 TB டேட்டா கிடைக்கிறது.

'டேட்டா சச்செட் (Data Sachet)' திட்டம் என்றால் என்ன?

'டேட்டா சச்செட் (Data Sachet)' திட்டம் என்றால் என்ன?

முக்கிய குறிப்பு இது ஒரு 'டேட்டா சச்செட் (Data Sachet)' திட்டம் என்பதை மறக்க வேண்டாம். ஒரு பயனர் தனது திட்டத்தால் வழங்கப்படும் அனைத்து FUP தரவையும் பயன்படுத்திய பிறகு இந்த திட்டத்தை வாங்க முடியும். ஜியோ ஃபைபர் அதன் ஒவ்வொரு திட்டத்துடனும் 3.3TB தரவை பயனர்களுக்கு வழங்குவதால், சராசரி இணையத் தேவைகளைக் கொண்ட பயனருக்கு இந்த தரவுத் தொகுப்பு எப்போதுமே தேவைப்படும் என்று கூறிவிட முடியாது.

கீழடியில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம்.. தமிழர்களை வியப்பில் ஆழ்த்திய கலை நுட்பம்..கீழடியில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம்.. தமிழர்களை வியப்பில் ஆழ்த்திய கலை நுட்பம்..

FUP வரம்பு முடிந்த பின் டேட்டா தேவை இருக்கா? அப்போ இதான் சரியான திட்டம்

FUP வரம்பு முடிந்த பின் டேட்டா தேவை இருக்கா? அப்போ இதான் சரியான திட்டம்

இருப்பினும் FUP வரம்பு முடிந்த பின் டேட்டா தேவை இருக்கும் பயனர்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்த போதுமானது. பயனர் முதலில் வாங்கிய எந்த பிராட்பேண்ட் திட்டமாக இருந்தாலும் அதன் மேல் இந்த 'டேட்டா சச்செட்' பொருந்தும். ஏர்டெல் அல்லது பிஎஸ்என்எல் ஆகியவை தங்கள் பயனர்களுக்கு இத்தகைய திட்டத்தை வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மற்ற நெட்வொர்க் பிராட்பேண்ட் திட்டத்துடன் ஒப்பிடுகையில், இத்தகைய சலுகையுடன் ரீசார்ஜ் திட்டத்தை மற்ற நெட்வொர்க் கொண்டிருக்கவில்லை.

இது எதுவுமே வேண்டாமா? அப்போ உங்களுக்காகவே இருக்கிறது JioFiber சோதனை திட்டங்கள்

இது எதுவுமே வேண்டாமா? அப்போ உங்களுக்காகவே இருக்கிறது JioFiber சோதனை திட்டங்கள்

1TB இலிருந்து பயன்படுத்தப்படாத டேட்டா அல்லது மிஞ்சி உள்ள டேட்டா எதுவும் உங்கள் கணக்கில் வாய்ப்பு வைக்கப்படமாட்டாது. மேலும் திட்டத்தின் காலாவதியான நேரத்தில் இவையும் செயலிழக்கும் என்பதை மறக்க வேண்டாம். JioFiber இலிருந்து ஒரு ஃபைபர் இணைப்பு பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால் , நிறுவனம் பயனர்களுக்கு வழங்கும் இரண்டு சோதனைத் திட்டங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இந்த 10 விஷயங்கள் உங்கள் போனில் நடந்தால்.. நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்..இந்த 10 விஷயங்கள் உங்கள் போனில் நடந்தால்.. நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்..

150 எம்.பி.பி.எஸ் வேகம்.. எந்த திட்டம் சரியானது என்று நீங்களே செலக்ட் பண்ணுங்க

150 எம்.பி.பி.எஸ் வேகம்.. எந்த திட்டம் சரியானது என்று நீங்களே செலக்ட் பண்ணுங்க

ஜியோ பைபர் சேவையைச் சோதனை செய்து பார்க்க விரும்பும் பயனர்களுக்கான முதல் திட்டமாக ரூ. 1,500 திட்டம் செயல்படுகிறது. இரண்டாவது சோதனை திட்டமாக ரூ. 2,500 விலை கொண்ட திட்டம் செயல்படுகிறது. இரண்டு திட்டங்களும் பயனர்களுக்கு 150 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகின்றன, இருப்பினும் ரூ. 2,500 திட்டத்துடன் தொகுக்கப்பட்ட சில OTT சலுகைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ரூ. 1,500 திட்டம் எந்த OTT சலுகைகளுடன் வரவில்லை என்பதையும் கவனத்தில்கொள்க.

Best Mobiles in India

English summary
Reliance JioFiber Is Offering 1TB Of Data Sachet Plan For Less Than Rs 199 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X