ரூ.599 ரீசார்ஜ் செய்தால் ரூ.4,500 மதிப்பு நன்மை இலவசமா? JioFiber பயனர்களுக்கு தீபாவளி கிஃப்ட்.!

|

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டால் ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இரட்டிப்பு சந்தோசம் தான், காரணம், ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஒவ்வொரு ஆண்டும், பண்டிகை காலத்தில் தவறாமல் சிறப்புச் சலுகைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையைச் சிறப்பிக்கும் விதத்தில், Jio நிறுவனம் இப்போது நம்ப முடியாது ஒரு சிறப்புத் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் படி, JioFiber ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4500 மதிப்பிலான நன்மைகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

JioFiber பயனர்களுக்கு ரூ. 4,500 மதிப்பிலான நன்மை இலவசமா?

JioFiber பயனர்களுக்கு ரூ. 4,500 மதிப்பிலான நன்மை இலவசமா?

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் உள்ள தனது பயனர்களுக்கு புதிய ரிலையன்ஸ் ஜியோஃபைபர் சலுகையை அறிவித்துள்ளது.
ஆம், இது JioFiber பயனர்களுக்கு கிடைக்கும் சலுகையாகும். பண்டிகைக் கால சலுகையின் ஒரு பகுதியாக, ஜியோஃபைபர் திட்டத்தின் ரீசார்ஜ் உடன் ரூ. 4,500 மதிப்பிலான நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் அதிக சலுகைகளை ஜியோ வழங்கியுள்ளது.

Reliance JioFiber Festival Bonanza சலுகை எப்போது வரை கிடைக்கும்?

Reliance JioFiber Festival Bonanza சலுகை எப்போது வரை கிடைக்கும்?

இந்த சலுகை ஒரு பண்டிகை கால சிறப்புச் சலுகை என்பதனால், குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த சலுகையைப் பயனர்கள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகைகள் JioFiber போஸ்ட்பெய்ட் திட்டங்களில் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. அக்டோபர் 9 அல்லது அதற்கு முன் ஜியோஃபைபர் ஃபெஸ்டிவல் பொனான்சாவை (Reliance JioFiber Festival Bonanza) வாடிக்கையாளர்கள் பெற வேண்டும்.

Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?

எந்த ரீசார்ஜ் திட்டத்துடன் ரூ.4,500 மதிப்பிலான நன்மை இலவசமாக கிடைக்கும்?

எந்த ரீசார்ஜ் திட்டத்துடன் ரூ.4,500 மதிப்பிலான நன்மை இலவசமாக கிடைக்கும்?

Jio போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான ரிலையன்ஸ் ஜியோஃபைபர் பண்டிகை கால ஆஃபரைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.
எந்த ரீசார்ஜ் திட்டத்துடன் இந்த சலுகை செல்லுபடியாகும் என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.
ரிலையன்ஸ் ஜியோஃபைபர் ரூ.599 அல்லது ரூ.899 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது, இந்த ரூ.4,500 மதிப்புள்ள நன்மைகள் கிடைக்கும்.

ரூ.599 ரீசார்ஜ் திட்டத்துடன் இத்தனை இலவசமா?

ரூ.599 ரீசார்ஜ் திட்டத்துடன் இத்தனை இலவசமா?

ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டச் சலுகை அக்டோபர் 9 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை மறக்காதீர்கள்.
JioFiber ஆஃபர் காலத்தில், நீங்கள் ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது Reliance Digital, Myntra, AJIO மற்றும் Ixigo ஆகியவற்றில் ஷாப்பிங் செய்வதற்கான தள்ளுபடி கூப்பன்களை ஜியோ வழங்குகிறது. எந்தெந்த ஷாப்பிங் தளத்தில் இருந்து, எவ்வளவு மதிப்புள்ள நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

JioFiber ரூ.599 ரீசார்ஜ் திட்டம்

JioFiber ரூ.599 ரீசார்ஜ் திட்டம்

JioFiber ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு Myntra, AJIO மற்றும் Reliance Digital Store தளங்களில் தலா ரூ.1,000 மதிப்புள்ள பலன்களை இந்த திட்டத்துடன் நீங்கள் பெறலாம். Ixigo-வில் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 தள்ளுபடியையும் பெறலாம்.
இத்துடன், ரூ.599 திட்டம் ஆறு மாதங்களுக்கு 30Mbps வேகத்தில் மாதத்திற்கு 3.3TB அதிவேக டேட்டாவை வழங்குகிறது.

SBI ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமா? இந்த புது விதி உண்மை தானா?SBI ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமா? இந்த புது விதி உண்மை தானா?

இத்துடன் ஜியோ செட்-டாப் பாக்ஸும் இலவசமா?

இத்துடன் ஜியோ செட்-டாப் பாக்ஸும் இலவசமா?

இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் 15+ OTT இயங்குதளங்களுக்கான அணுகலையும் நீங்கள் பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்மைகளின் ஒரு பகுதியாக 550-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் இதனுடன் கிடைக்கிறது.
இதற்கும் மேல், வாடிக்கையாளர்களுக்கு இலவச ஜியோ செட்-டாப் பாக்ஸும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையிலே ரூ.599 விலையில் இத்தனை நன்மைகள் கிடைக்கும் ஒரே திட்டம் இதுவாகும்.

JioFiber ரூ.899 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

JioFiber ரூ.899 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

Myntra, AJIO மற்றும் Reliance Digital நன்மைகள் மொத்தமாக ரூ. 3,000 மற்றும் Ixigo நன்மை ரூ.1,500 ஐ சேர்த்து உங்களுக்கு மொத்தமாக ரூ.4,500 மதிப்பிலான நன்மைகள் கிடைக்கிறது.
மறுபுறம் ரூ.899 திட்டம், மைந்த்ரா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் தலா ரூ.500 மதிப்புள்ள பலன்களை வழங்கும். இது தவிர, AJIO நன்மையாக ரூ.1,000 மற்றும் Ixigo நன்மையாக ரூ.1,500 என்ற தள்ளுபடி கூப்பன் உங்களுக்கு கிடைக்கிறது.

BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?

ரூ.899 மற்றும் ரூ.599 திட்டத்திற்கு இடையில் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா?

ரூ.899 மற்றும் ரூ.599 திட்டத்திற்கு இடையில் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா?

ரூ.899 திட்டம் அப்படியே ரூ.599 திட்டத்தில் இருக்கும் அதே அளவு டேட்டா மற்றும் பிற நன்மைகளை வழங்குகிறது. ஆனால், 100எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை வழங்குகிறது.
ரூ.599 திட்டத்தில் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது மூன்று மாதங்களில் செல்லுபடியாகும் காலம் குறைவாக உள்ளது.
இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே கிடைக்கும் என்பதை மறக்காதீர்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், இந்த ஷாப்பிங் தளத்திற்கான கூப்பன்கள் கட்டாயம் உங்களுக்குப் பயனுள்ளதாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Reliance JioFiber Festival Bonanza Provides Benefits Of Rs 4500 On Rs 599 and Rs 899 Postpaid Plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X