நம்பமுடியாத சலுகை & கட்டணத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது - ஜியோபைபர் சேவை.!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்திய டெலிகாம் தொழிற்துறையில் நிகழ்த்திய அதிரடி சேவை(சலுகை)களுக்கு பிறகு அடுத்த பெரிய காரியத்திற்காகப் பாய்கிறது.

அது இந்திய பிராட்பேண்ட் இணைப்புக்கள் தொலைத் தொடர்புத் துறையில் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றே ஆனால் அதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலைப்பாட்டில் இப்போது இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐ.ஓ.டி) மற்றும் இணையத்தளத்தின் நம்பகத்தன்மை ஆகியவற்றின் வருகையுடன், ஹோம் பிராட்பேண்ட் இணைப்புகள் வரவிருக்கும் ஆண்டுகளில் பலவகைகளாய் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபைபர் தொழில்நுட்பத்துடன் நிகழ்த்தப்போகிறது என்பதும் உறுதியாகியுள்ளது.

எகனாமிக் டைம்ஸ்

எகனாமிக் டைம்ஸ்

ஜியோபைபர் ஆனது அதிக வேகம் மற்றும் குறைந்த தரவு விலைகளுடன் பிராட்பேண்ட் தொழிற்துறையை கதிகலங்க செய்யவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளி பருவத்தில் ஜியோபைபர் வணிகச் சேவைகளை அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

100ஜிபி

100ஜிபி

ரூபாய் 500/- என்ற விலை நிர்ணயத்தில் 100ஜிபி அளவிலான டேட்டாவை பயனர்கள் பெற முடியும் என்றும் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

ஏர்டெல் ஏற்கனவே

ஏர்டெல் ஏற்கனவே

அலைவரிசை அரங்கில் மிகப் பெரிய நிறுவனமான ஏர்டெல், ஏற்கனவே ஜியோவுடன் ஆன கட்டண யுத்தத்தை உணர்ந்திருக்கிறது என்பதால் அதன் தற்போதைய பிராட்பேண்ட் திட்டங்களில் பல புதுமைகளை ஏற்கனவே கொண்டு வந்த வண்ணம் உள்ளது

பெரும்பான்மை பிராட்பேண்ட்

பெரும்பான்மை பிராட்பேண்ட்

மறுபக்கம் மாநில அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை ஜியோவின் நகர்வுகளால் மிகவும் பாதிக்கப்படும் என்பது உறுதி, ஏனெனில் அவை நாட்டின் பெரும்பான்மை பிராட்பேண்ட் இணைப்புகளை இன்னும் குறைக்கும்.

இலவசமாக

இலவசமாக

மும்பை, டெல்லி-என்.சி.ஆர், அஹமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில் நிறுவனம் இலவசமாக அதன் ஜியோபைபர் சோதனை முன்னோட்டம் என்ற பெயரின் கீழ் இலவசமாக அதன் பிராட்பேண்ட் சேவை இந்த மாதத்திற்கு முன்னதாக ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

முதல் மூன்று மாதங்களுக்கு

முதல் மூன்று மாதங்களுக்கு

ஜியோ 4ஜி சேவையை போலவே ஜியோபைபர் சேவையும் அதன் அறிமுக சலுகையின் கீழ் அதன் பயனர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு இலவச அதிவேக இண்டர்நெட் வழங்கும்.

ஜியோமீடியா சாதனங்களுடன்

ஜியோமீடியா சாதனங்களுடன்

ஜியோவின் பிராட்பேண்ட் சலுகையானது அதன் ஜியோமீடியா சாதனங்களுடன் அதாவது ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ், ரவுட்டர்ஸ் மற்றும் பவர்லைன் கேசட் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றுடன், ஒரு கூடுதலான ஜியோ சேவைகளை வழங்கும் முயற்சியில் வெளிவரும்.

1000ஜிபி தரவு

1000ஜிபி தரவு

ஜியோ பிராட்பேண்ட் சேவையின் விலை நிர்ணயத்தை பொறுத்தம்மட்டில் 600 ஜிபி தரவுக்கு ரூ.500/- என தொடங்கி 1000ஜிபி தரவுக்கு ரூ.2000/- என்பது வரையிலாக 100எம்பிபிஎஸ் வேகத்தில் சேவை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொழுதுபோக்கு சேவை

பொழுதுபோக்கு சேவை

ஜியோமீடியா சாதனங்களின் உதவியுடன் டெல்கோ எச்டி தொலைக்காட்சி, வீடியோ ஆன் டிமாண்ட் மற்றும் ஜியோ க்ளவுட் ஆகியவைகள் பொழுதுபோக்கு சேவைகளின் கீழ் வழங்கப்படும். மேலும் ஜியோ லேண்ட்லைன் தொலைபேசி சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பைபர்-டூ-தி-ஹோம்

பைபர்-டூ-தி-ஹோம்

இந்த ஜியோ ஹோம் பிராட்பேண்ட் அல்லது பைபர்-டூ-தி-ஹோம் (FTTH) சேவையானது ஹோம் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை அதாவது - ஸ்மார்ட்போன்கள் / டேப்ளெட்கள் மூலம் மின்னணு பொருட்கள் கட்டுப்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை உள்ளடைக்கியது. ஸ்மார்ட் செருகிகளைப் (ப்ளக்ஸ்) பயன்படுத்தி இது அடையப்படும்.

ஸ்மார்ட்போன்களின் மூலம் கட்டுப்பாடு

ஸ்மார்ட்போன்களின் மூலம் கட்டுப்பாடு

தவிர ஸ்மார்ட் கேமரா, ஸ்மார்ட் டொர்பேல், ஸ்மார்ட் லாக் மற்றும் சிம் அலாரம் ஆகியவைகளையும் கொண்டிருக்கும், மேலும் இவை அனைத்தையும் பயனர்கள் அவர்களின் ஸ்மார்ட்போன்களின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும் ஜினியோ நிறுவனம் வீட்டு கண்காணிப்பு தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மை ஹோம் விளம்பர திட்டம்

மை ஹோம் விளம்பர திட்டம்

மறுபுறத்தில், மை ஹோம் விளம்பர திட்டத்தை ஏர்டெல் வெளியிட்டுள்ளது, இது அதிகபட்சமாக 250 ஜிபி இலவச தரவை அதன் பிராட்பேண்ட் பயனர்களுக்கு வழங்குகிறது. மைஹோம் திட்டம் ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்புடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு பிந்தைய இணைப்பு மற்றும் டிஜிட்டல் டிவி இணைப்புகளுக்கு 5ஜிபி கூடுதல் தரவை வழங்குகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance JioFiber expected to launch commercialy this diwali with prices as low as Rs 500 for 100GB. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X