ஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்?

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கும் வாடிக்கையாளர்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

 ஜியோ ஃபைபர்

ஜியோ ஃபைபர்

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோஃபைபர் சேவைகள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜியோஃபைபர் சேவைகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜியோ ஃபைபர் சேவை உடன் அதற்கான கட்டண விவரங்களையும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

ஜியோஃபைபர் அறிமுக சலுகை

ஜியோஃபைபர் அறிமுக சலுகை

விருப்புமுள்ள பயனர்களுக்கு மட்டும் ரிலையன்ஸ் ஜியோஃபைபர் அறிமுக சலுகை வழங்கப்பட்டது. சேவைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும் முன்பே ஜியோஃபைபர் சேவைக்கான சோதனை துவங்கி நடைபெற்று வந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

விவோ வி17ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!விவோ வி17ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

 கட்டணம் வசூலிக்க இயலாது

கட்டணம் வசூலிக்க இயலாது

இந்தநிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் என்னவென்றால், ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களிடம் ரிலையன்ஸ் ஜியோ மேலும் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்க இயலாது என கூறப்படுகிறது. தற்சமயம் ஜியோஃபைபர் சேவைக்கான கட்டண முறைகளை உருவாக்கி வருவதாக தெரிகிறது.

விளம்பர பிரிவு

விளம்பர பிரிவு

பின்பு இதற்கான பணிகள் முழுமை பெற கண்டிப்பாக சிலகாலம் ஆகும் என்பதோடு, இதுகுறித்து ஜியோ தனது விற்பனை மற்றும் விளம்பர பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், இதன்பின்னரே ஹோம் பிராட்பேண்ட் சேவையை சரியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

ட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை! இனி எல்லாமே சேஃப்!ட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை! இனி எல்லாமே சேஃப்!

ரூ.699 என்கிற மாத கட்டணத்தில்

குறிப்பாக ஜியோஃபைபர் சலுகைகள் பொறுத்தவரை ரூ.699 என்கிற மாத கட்டணத்தில் துவங்கி அதிகபட்சமாக மாதம் ரூ.8,499வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இவற்றின் இணைய வேகம் 100mbps இல் துவங்கி 1Gbps வரை
கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance JioFiber broadband users won’t be billed for another month: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X