Home
News

அமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.!

மிகவும் மலிவான விலையில் ரூ899க்கு ஜியோஃபை டாங்கிள் கிடைக்கிறது.

By Vivek Sivanandam

ரிலையன்ஸ் ஜியோஃபை டாங்கிள் வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு, அமேசான் ப்ரைம் டே விற்பனை நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் இது தான் சரியான தருணம். மிகவும் மலிவான விலையில் ரூ899க்கு ஜியோஃபை டாங்கிள் கிடைக்கிறது.

அமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.!

முன்னதாக இது சலுகை விலையில் ரூ999 க்கு விற்கப்பட்டுவந்தது. பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா, 36 மணி நேர ப்ரைம் டே விற்பனையை ஜூலை 16 மதியம் 12 மணி முதல் ஜூலை17 நள்ளிரவு 12 மணி வரை நடத்துகிறது என்பதை தெரியாதவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

 ப்ரைம் டே

ப்ரைம் டே

இந்த ப்ரைம் டே விற்பனை அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் ப்ரைம் உறுப்பினராக இணைய ஆண்டு சந்தா செலுத்தும் திட்டம் உள்ளது. ஆண்டு சந்தா செலுத்த விரும்பாதவர்களுக்காக தற்போது ரூ129 க்கு ஒரு மாத அமேசான் ப்ரைம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமேசான் சந்தாதாரர்களுக்கு, வீடியோ, மியூஸிக் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.

ரூ399க்கு ஜியோஃபை டாங்கிள் வாங்குவது எப்படி?

ரூ399க்கு ஜியோஃபை டாங்கிள் வாங்குவது எப்படி?

ஆச்சர்யமளிக்கக்கூடிய வகையில், ஜியோஃபை டாங்கிள் 12 மாதங்கள் கழித்து வெறும் ரூ399 மதிப்புடையதாக இருக்கும். எப்படி என கேட்கிறீர்களா? ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அத்திட்டத்தின் படி, 12 மாத கால ஜியோ போஸ்ட்பெய்டு பயன்பாட்டிற்கு பிறகு ரூ500ஐ அந்நிறுவனம் கேஷ்பேக்காக திரும்ப அளிக்கும். அதன் மூலம் ஜியோஃபை டாங்கிளின் விலை ரூ899 லிருந்து ரூ399 ஆக குறைந்தவிடும்.

ஜியோ போஸ்ட்பெய்டு

ஜியோ போஸ்ட்பெய்டு

ஜியோ போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் ரூ199 அன்லிமிடேட் திட்டத்தை தேர்வு செய்யும் போது, தினசரி அளவில்லா டேட்டாவுடன் நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத்துடன் சர்வதேச அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளை பெறுவர். இந்த திட்டத்தை பெற, புதிய ஜியோ போஸ்ட்பெய்டு சிம் உடன் புதிய ஜியோஃபை கருவியை வாங்க வேண்டும்.

போஸ்ட்பெய்டு

போஸ்ட்பெய்டு

பின்னர் பயனர்கள் போஸ்ட்பெய்டு சிம்மை ஆக்டிவேட் செய்து ஜியோஃபை கருவியுடன் பயன்படுத்த வேண்டும். ரூ500 கேஷ்பேக் தொடர்ந்து 12 மாத பில்லுடன் பயனர்களின் போஸ்ட்பெய்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Reliance JioFi dongle gets cheaper during Amazon Prime Day sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X