அட.. ஜியோஃபை வாங்குனா, இவ்வளவு சலுகைகளா.??

Written By:

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் ஏற்படுத்திய கலவரம் இன்னும் ஓயவில்லை என்றே கூறலாம். ஜியோ அல்லாத டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து புதுப்புது சலுகைகளை அறிவித்து வருவதே இதற்குச் சாட்சி..

ஸ்மார்ட்போன்களுக்கு 4ஜி சிம் வழங்கியதோடு அந்நிறுவனம் வெளியிட்ட மற்றொரு சேவை தான் ஜியோஃபை. பென் டிரைவ் அளவு இருக்கும் ஹாட்ஸ்பாட் கருவியான ஜியோஃபை கொண்டு வீடு முழுக்க இண்டர்நெட் வழங்க முடியும்.

வீட்டில் நான்கு ஸ்மார்ட்போன், டேப்ளெட், அல்லது லாப்டாப் என அனைத்துக் கருவிகளுக்கும் ஹாட்ஸ்பாட் கொண்டு இண்டர்நெட் விநியோகம் செய்ய முடியும். இதோடு ஜியோஃபை வழங்கும் இதர பயன்கள் எவை என்பதை இங்குப் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வெல்கம் ஆஃபர்

வெல்கம் ஆஃபர்

புத்தம் புதிய ஜியோஃபை கருவியுடன் ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃபர் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இலவச வாய்ஸ் கால், டேட்டா, ஜியோ ஆப்ஸ் போன்றவற்றை டிசம்பர் 31, 2016 வரை முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்த முடியும்.

4ஜி வேகம்

4ஜி வேகம்

அதிவேக 4ஜி இண்டர்நெட் பயன்படுத்துவதோடு நொடிக்கு சுமார் 150 எம்பி வேகத்தில் டவுன்லோடு மற்றும் நொடிக்கு சுமார் 50 எம்பி என்ற அப்லோடு வேகம் கிடைக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

2ஜி / 3ஜி போன்

2ஜி / 3ஜி போன்

எவ்வித 2ஜி மற்றும் 3ஜி வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் 4ஜி வோல்ட்இ சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

எச்டி தரத்தில் கால்கள்

எச்டி தரத்தில் கால்கள்

வீடியோ மற்றும் எச்டி தரத்தில் வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். எஸ்எம்எஸ் அனுப்புவது, (5+1) ஆடியோ மற்றும் (3+1) வீடியோ கான்ஃபெரென்ஸ் கால்களை ஜியோ 4ஜி வாய்ஸ் ஆப் மூலம் மேற்கொள்ளலாம்.

கருவிகள்

கருவிகள்

வைபை வசதி கொண்ட சுமார் 10 கருவிகளுக்கு இண்டர்நெட் இணைப்பு வழங்க முடியும். ஸ்மார்ட்போன், லாப்டாப், டேப்ளெட் மற்றும் ஸ்மார்ட் டிவி என எவ்வித கருவிக்கும் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்க முடியும்.

எங்கும் எப்போதும்

எங்கும் எப்போதும்

பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதால் ஜியோஃபை கருவியினை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். நீங்கள் எங்குச் சென்றாலும் இண்டர்நெட் உங்களுடன் இருக்கும்.

பேட்டரி

பேட்டரி

சக்தி வாய்ந்த பேட்டரி கொண்டிருப்பதால் சுமார் 7-8 மணி நேரம் சர்பிங் செய்ய முடியும். ரிலையன்ஸ் ஜியோஃபை கருவியானது சுமார் 2600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

விலை

விலை

ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஜியோஃபை ஆஃபர் பிரிவில் புதிய ஜியோஃபை கருவியின் விலை ரூ.1,999/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதே தளத்தில் 'Buy Now' எனும் பட்டனை கிளிக் செய்து ஆன்லைனிலேயே வாங்கிட முடியும். இதோடு இந்த கருவியானது ரிலையனஸ் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Reliance JioFi Device Price and How to Buy
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்