விவசாயிகள் போராட்டம்:ஜியோ டவர்கள் சேதம்., அரசிடம் முறையிடும் ஜியோ நிறுவனம்.!

|

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் தீர்க்கமாக உள்ளனர். ஆனால், இதை ஏற்க மத்திய அரசு தயாராக இல்லை.

வேளாண் சட்டங்களில் சில திருத்தங்களை

அதற்கு பதிலாக வேளாண் சட்டங்களில் சில திருத்தங்களை மட்டும் கொண்டு வர மத்திய அரசு முன்வந்தது. இது தொடர்பான வரைவு அறிக்கை விவசாய சங்க நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த விவசாயிகள், மத்திய அரசின் திருத்தங்களை ஏற்க மறுத்துள்ளனர்.

வழி வகுக்கப்பட்டுள்ள

குறிப்பாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உளிட்ட விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல் இந்தச் சட்டங்கள் மூலம் அதானி, அம்பானி போன்ற பெரும் தொழிலதிபார்கள் வேளாண் துறையை கைப்பற்றுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சொந்தமான சொத்துகள்,

எனவே இதனால் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள், பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. மேலும் இதில் முக்கியமாக ஜியோ நிறுவனத்தின் தொலைதொடர்பு கோபுரங்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்படுகின்றன.

அண்மையில் வெளிவந்த தகவலின்படி 1500 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கினறன. மேலும் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக் கூடாது என்று பஞ்சாப் முதல் அமரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும் இது தொடர்கதையாகி உள்ளது.

போலீஸ் டிஜிபி இடம் ஜியோ

மேலும் இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில அரசின் உதவியை வேண்டியுள்ளது ஜியோ நிறுவனம். இதற்குவேண்டி அந்த மாநில முதல்வர் மற்றும் போலீஸ் டிஜிபி இடம் ஜியோ நிறுவனம் முறையிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு

குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. பின்பு இந்த நாசவேலை செய்யும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு துரிதமான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பல கோடி ரூபாய் நஷ்டத்தை தவிர்க்க முடியும் என்று ஜியோ வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

ஜனநாயக உரிமையை பயன்படுத்தி போராட்டத்தில்

இதற்கு முன்னதாகபிரதமர் மோடியும், ஜனநாயக உரிமையை பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபடலாமே தவிர பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Writes to Punjab Chief Minister Amarinder Singh about 1,500 Network Sites have already been Vandalised: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X