2018-ல் நம்பி ரீசார்ஜ் செய்யக்கூடிய 9 பெஸ்ட் டெலிகாம் திட்டங்கள்.!

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய மூன்று நிறுவனங்களின் சிறந்த லோ பட்ஜெட், மிட் பட்ஜெட் மற்றும் ஹை எண்ட் பட்ஜெட்டில் கிடைக்கும் ப்ரீபெயிட் திட்டங்களை பற்றியும் அவைகளின் நன்மைகளை பற்றியும்..

|

இந்திய டெலிகாம் துறையில் கட்டண யுத்தம் தொடங்கி ஒரு முழு ஆண்டு கடந்து 2018-ஆம் ஆண்டே ஆகிவிட்டது. ரிலையன்ஸ் ஜியோ என்கிற தீப்பொறியில் இந்திய டெலிகாமின் விலைமிக்க திட்டங்கள் பற்றி எரிந்தன. அதன்பின்னர் பார்தி ஏர்டெல், வோடாபோன் என்கிற இந்திய பெருநிறுவனங்கள் மலிவான விலையில் திட்டங்களை வழங்கியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

2018-ல் நம்பி ரீசார்ஜ் செய்யக்கூடிய 9 பெஸ்ட் டெலிகாம் திட்டங்கள்.!

இருப்பினும் கூட இன்றுவரை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இருப்பினும் கூட தொடக்கத்தையும் பழக்கத்தையும் மறவாதே என்றே தனிப்பட்ட கொள்கையின் கீழும், தொலைபேசி எண்ணை மாற்ற விரும்பாத மற்றும் இரட்டை சிம் பயன்பாடு போன்ற இடஹர காரணங்களிலாலும் பெரும்பாலான மக்கள் ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்களின் சேவைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன.

சிறந்த லோ-பட்ஜெட், மிட்-பட்ஜெட் மற்றும் ஹை-எண்ட் பட்ஜெட்

சிறந்த லோ-பட்ஜெட், மிட்-பட்ஜெட் மற்றும் ஹை-எண்ட் பட்ஜெட்

அப்படியானோர்கள் இந்த 2018-ஆம் ஆண்டில் தங்களின் சேவைகளை மாற்ற விரும்பினாலும் சரி, அல்லது இதர நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களை அறிந்துகொள்ள விரும்பினாலும் சரி அல்லது தங்களின் தற்போதை சேவையின் கீழ் கிடைக்கும் சிறப்பான திட்டத்தை கண்டறிய தேடினாலும் சரி - இந்த தொகுப்பு உங்களுக்கு நிச்சயம் உதவும்.

ப்ரீபெயிட் திட்டங்கள்

ப்ரீபெயிட் திட்டங்கள்

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய மூன்று நிறுவனங்களின் சிறந்த லோ பட்ஜெட், மிட் பட்ஜெட் மற்றும் ஹை எண்ட் பட்ஜெட்டில் கிடைக்கும் ப்ரீபெயிட் திட்டங்களை பற்றியும் அவைகளின் நன்மைகளை பற்றியும் விரிவாக காணலாம்.

லோ-பட்ஜெட் ஜியோ

லோ-பட்ஜெட் ஜியோ

குறைந்த பட்ஜெட் விலை நிர்ணயம் கொண்ட ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199 திட்டமானது மொத்தம் 33 ஜிபி அளவிலான 4 ஜி தரவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது, அதாவது தினமும் 1.2 ஜிபி டேட்டா. உடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்கும்.

லோ-பட்ஜெட் வோடாபோன்

லோ-பட்ஜெட் வோடாபோன்

வோடபோன் வழங்கும் ரூ.198 திட்டமானது நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி/ 3ஜி தரவை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்குகிறது. உடன் நாள் ஒன்றிற்கு 300 நிமிடங்களுக்கான வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

லோ-பட்ஜெட் ஏர்டெல்

லோ-பட்ஜெட் ஏர்டெல்

மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199/- திட்டமானது ஒரு நாளைக்கு 1 ஜிபி 4 ஜி தரவு மற்றும் வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி ஆகிய நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

மிட்-பட்ஜெட் ஜியோ

மிட்-பட்ஜெட் ஜியோ

ஜியோவின் இடைப்பட்ட திட்டமான ரூ.459/- திட்டமானது நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 84 நாட்களுக்கு வழங்கும். உடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய வழக்கமான நன்மைகளையும் வழங்கும்.

மிட்-பட்ஜெட் வோடாபோன்

மிட்-பட்ஜெட் வோடாபோன்

வோடபோன் நிறுவனத்தின் ரூ.458/- திட்டமானது ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 4ஜி/ 3ஜி டேட்டாவை மொத்தம் 70 நாட்களுக்கு வழங்கும் உடன் வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி அழைப்புகளையும், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்கும். இதன் அன்றாட அழைப்பு வரம்பு 300 நிமிடங்கள் ஆகும், அது மாறுபடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிட்-பட்ஜெட் ஏர்டெல்

மிட்-பட்ஜெட் ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.448/- திட்டமானது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு மற்றும் வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி அழைப்பு ஆகிய நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் நன்மையை மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

ஹை-எண்ட் பட்ஜெட் ஜியோ

ஹை-எண்ட் பட்ஜெட் ஜியோ

ஜியோவின் ஹை எண்ட் திட்டமான ரூ.799/- நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கும். உடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய வழக்கமான நன்மைகளையும் வழங்கும்.

ஹை-எண்ட் பட்ஜெட் வோடாபோன்

ஹை-எண்ட் பட்ஜெட் வோடாபோன்

வோடபோன் நிறுவனத்திடம் ரூ.799/- என்கிற புள்ளியில் திட்டங்கள் இல்லை. இருப்பினும் அதன் ரூ 859 திட்டமானது 11ஜிபி அளவிலான 3ஜி டேட்டா மற்றும் 2ஜி/3ஜி/4ஜி க்கான 1ஜிபி அளவிலான இலவச வைஃபை ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கும்.

ஹை-எண்ட் பட்ஜெட் ஏர்டெல்

ஹை-எண்ட் பட்ஜெட் ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.779/- திட்டமானது ஒரு நாளைக்கு 3.5ஜிபி அளவிலான 4ஜி தரவு மற்றும் வணிக நோக்கமற்ற வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி அழைப்பு ஆகிய நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் நன்மையை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio vs Vodafone vs Airtel: Latest prepaid plans and offers you may opt for in 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X