Home
News

ஏர்டெல் Vs ஜியோ Vs வோடபோன் ஐடியா : ரூ.200-க்கு கீழ் வழங்கும் சிறந்த திட்டங்கள்.!

ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் மலிவு விலையில் சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கால் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூல் செய்வதில்லை, ஜியோ நிறுவனம் தொடர்ந்து கால் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூல் செய்கிறது.

வைத்து பார்க்கும்போது

டேட்டா நன்மைகளை வைத்துப் பார்க்கும்போது ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் சற்று அதிகமாக வழங்குகிறது என்று கூறலாம். சரி இப்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் 200-க்கு கீழ் வழங்கும் திட்டங்களையும் அதன் நன்மைகளையும் பார்க்கலாம்.

ஜியோ ரூ.129-பிரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.129-பிரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.129-திட்டம் ஆனது பயனர்களுக்கு 2ஜிபி டேட்டா, வரம்பற்ற Jio to Jio இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1,000 FUP நிமிடங்கள் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

 ஜியோ ரூ.149-பிரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.149-பிரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.149-திட்டம் ஆனது பயனர்களுக்குத் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற Jio to Jio இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1,000 FUP நிமிடங்கள், 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.199-பிரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.199-பிரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.199-திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற Jio to Jio இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1,000 FUP நிமிடங்கள், 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

 வோடபோன் ஐடியா ரூ.129-பிரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.129-பிரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.129-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 2ஜிபி டேட்டா, 300எஸ்எம்ஸ், இலவச வரம்பற்ற கால் அழைப்பு
நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். மேலும் வோடபோன் நிறுவனத்தின் ரூ.19-திட்டம்ஆனது இரண்டு நாட்களுக்கு வரம்பற்றஇலவச கால் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா ரூ.149-பிரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.149-பிரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.149-பிரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 3ஜிபி டேட்டா, 300எஸ்எம்ஸ், இலவச வரம்பற்ற கால் அழைப்பு
நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.199-பிரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.199-பிரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.199-பிரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் 100எஸ்எம்ஸ், இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.129-பிரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.129-பிரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.129-பிரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 1ஜிபி டேட்டா, 300எஸ்எம்ஸ், இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், ஏர்டெல் தேங்ஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.149-பீரிபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.149-பீரிபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.149-பிரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 2ஜிபி டேட்டா, 300எஸ்எம்ஸ், இலவச வரம்பற்ற கால் அழைப்பு, ஏர்டெல் தேங்ஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.199-பிரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.199-பிரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.199-பிரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்குத் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் 100எஸ்எம்ஸ், இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24நாட்கள் ஆகும்.

ரூ.200-திட்டத்திற்குக் கீழ் சிறந்த

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஜியோ நிறுவனம் ரூ.200-திட்டத்திற்குக் கீழ் சிறந்த டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேசமயம்
கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது. ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகளை அருமையாக வழங்குகிறது, ஆனால் சரியான டேட்டா நன்மைகள் இல்லை.

Best Mobiles in India

English summary
Reliance Jio Vs Vodafone-Idea Vs Airtel: Best Plans Under Rs. 200: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X