ஏர்டெல் Vs ஜியோ Vs வோடபோன் ஐடியா : ரூ.500-க்கு கீழ் வழங்கும் சிறந்த 4ஜி டேட்டா வவுச்சர்கள்.!

|

ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் மலிவு விலையில் சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கால் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூல் செய்வதில்லை, ஜியோ நிறுவனம் தொடர்ந்து கால் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூல் செய்கிறது.

வோடபோன் நிறுவனங்கள் 500-க்கு கீழ் வழங்கும் வவுச்சர்களையும்

டேட்டா நன்மைகளை வைத்துப் பார்க்கும்போது ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் சற்று அதிகமாக வழங்குகிறது என்று கூறலாம். சரி இப்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் 500-க்கு கீழ் வழங்கும் வவுச்சர்களையும் அதன் நன்மைகளையும் பார்க்கலாம்.

ரூ.500-க்குள் கிடைக்கும் ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ரூ.500-க்குள் கிடைக்கும் ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.499 வவுச்சர் ஆனது Cricket Pack என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் 84ஜிபி FUP டேட்டா வழங்குகிறது. குறிப்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் ஓவர்-தி-டாப் (OTT) நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

'Work From Home'' என்று அழைக்கப்படும் ரூ.251, ரூ.201 மற்றும் ரூ.151 வவுச்சர்கள் சிறந்த டேட்டா நன்மையை வழங்குகிறது. அதன்படி ரூ.251 வவுச்சர் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. ரூ.201 வவுச்சர் ஆனது 40ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. ரூ.151 வவுச்சர் ஆனது 30ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த அனைத்து வவுச்சர்களும் 30 நாட்கள்வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.

 ரூ.500-க்குள் கிடைக்கும் ஏர்டெல் 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ரூ.500-க்குள் கிடைக்கும் ஏர்டெல் 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.48 வவுச்சர் ஆனது 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் ஏர்டெல் வழங்கும் ரூ.401 வவுச்சர் ஆனது 30ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் இந்த வவுச்சருடன், டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பியின் ழுவுவு நன்மையும் உள்ளது . மேலும் ரூ.401 வவுச்சர் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.

ரூ.500-க்குள் கிடைக்கும் வோடபோன் ஐடியா 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ரூ.500-க்குள் கிடைக்கும் வோடபோன் ஐடியா 4ஜி டேட்டா வவுச்சர்கள்

வோடபோன் ஐடியா நிறைய 4ஜி வவுச்சர்களை வழங்குகிறது. அவற்றில் சிறந்தது ரூ.251, ரூ.351 மற்றும் ரூ.355 வவுச்சர்கள். அதன்படி ரூ.251 வவுச்சர் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் ரூ.351 வவுச்சர் ஆனது 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, இதன் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

கடைசியாக ரூ.355 வவுச்சர் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இது 1 வருடத்திற்கு ZEE5 பிரீமியத்தின் இலவச OTT சந்தாவை வழங்குகிறது.

 ரூ.500-க்குள் கிடைக்கும் பிஎஸ்என்எல் 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ரூ.500-க்குள் கிடைக்கும் பிஎஸ்என்எல் 4ஜி டேட்டா வவுச்சர்கள்

பிஎஸ்என்எல் நிறுவனமும் சிறந்த 4ஜி டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. அதன்படி Data_WFH_151, DATASTV_197 மற்றும் Data_WFH_251 உள்ளிட்ட வவுச்சர்களை வைத்துள்ளன இந்நிறுவனம். Data_WFH_151 ஆனது 40ஜிபி டேட்டா நன்மையை 28 நாட்களுக்கு வழங்குகிறது, மேலும் இதில் ஜிங்கின் இலவச OTT சந்தாவும் கிடைக்கும்.

DATASTV_197 வவுச்சர் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இந்த வவுச்சர் வேலிடிட்டி 54 நாட்கள்ஆகும். Data_WFH_251 ஆனது 70ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio Vs Vodafone-Idea Vs Airtel: Best 4G Data Vouchers Under Rs 500: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X