Just In
- 6 hrs ago
பட்ஜெட் விலையில் விவோ Y20G ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?
- 9 hrs ago
Vivo Y31 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
- 10 hrs ago
பிப்ரவரி 1ம் தேதி முதல் வெறும் 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம்.. எப்படி தெரியுமா?
- 12 hrs ago
கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை நிறுத்தம்: காரணம் என்ன?
Don't Miss
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Movies
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
BSNL, ஜியோவிற்கே டஃப் கொடுக்கும் மூன்று புதிய திட்டங்கள்.. 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி..
பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதன் போஸ்ட்பெய்ட் பிரிவின் கீழ் ரூ. 199, ரூ. 798 மற்றும் ரூ. 999 என்ற மூன்று போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும் திட்டங்கள் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டிகளை உண்டாக்கும் போல் தெரிகிறது.

ஜியோவிற்கு டஃப் கொடுக்க BSNL புதிய மூன்று திட்டங்கள்
ஏனெனில் இந்த மூன்று திட்டங்களும் இப்போது நாடு முழுவதும் கிடைக்கும் படி BSNL செய்துள்ளது. இந்த திட்டங்களின் கிடைக்கும் தன்மை தற்பொழுது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களில் செயல்பாட்டிலிருந்த ரூ. 99, ரூ. 225, ரூ. 325, ரூ. 799 மற்றும் ரூ.1,125 திட்டங்களைப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்திற்கு போட்டியாக
ஏனெனில், டெலிகாம் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோவிற்கு டஃப் கொடுக்க BSNL நிறுவனத்தின் இந்த மூன்று திட்டங்களே போதுமானது என்று நிறுவனம் கருதுகிறது. ஜியோவிடம் போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் ரூ.399 முதல் தொடங்குகின்றது. இருப்பினும், அடிப்படை திட்டத்தின் விலை ரூ.199 மட்டுமே. எனவே ஜியோவை தேர்வு செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் இப்போது BSNL திட்டங்களைக் கருத்தில் கொள்வார்கள்.
எஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி? இனி Login செய்யாமலே இருப்புத் தொகை, பாஸ் புத்தகத்தை சரிபார்க்கலாம்

பிஎஸ்என்எல் ரூ.199 திட்டம்
இந்த புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன், BSNL நிறுவனம் டேட்டா ரோல்ஓவர் வசதியையும், பேமிலி ஆட் ஆன்-வசதியையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல் ரூ.199 திட்டமானது 75 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி கொண்ட 25 ஜிபி டேட்டா நன்மை, எம்டிஎன்எல் நெட்வொர்க் உட்பட வரம்பற்ற ஆன்-நெட் குரல் அழைப்பு, 300 ஆஃப்-நெட் நிமிடங்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

BSNL ரூ.798 திட்டம்
BSNL ரூ.798 போஸ்ட்பெய்ட் திட்டம் 150 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி உடன் 50 ஜிபி டேட்டா நன்மை, அனைத்து நெட்வொர்க்கு வரம்பற்ற வாய்ஸ் கால், மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு பேமிலி ஆட் ஆன் இணைப்பையும் வழங்குகிறது.

BSNL ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்டம்
BSNL ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்டமானது 75 ஜிபி டேட்டா அளவிலான டேட்டா, 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி, அனைத்து நெட்வொர்க்கு வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் மூன்று பேமிலி ஆட் ஆன் இணைப்பு வசதியையும் தனித்தனியாக வழங்குகிறது.

முக்கிய குறிப்பு
இப்பொழுது விஷயம் உங்களுக்கே புரிந்திருக்கும், மற்ற நெட்வொர்க்குகளை விட BSNL அதிக நன்மையை வழங்குகிறது என்பது இந்த திட்டங்களை பார்த்ததும் நமக்கே தெளிவாகத் தெரிகிறது.
குறிப்பு: ரூ.99, ரூ.225, ரூ.325, ரூ.799 மற்றும் ரூ.1125 போன்ற திட்டங்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் மட்டும் நிறுவனத்திடமிருந்து கூடுதல் அறிவிப்பு வரும் வரை அதே திட்டத்தில் இருக்குமாறு அறிவுரைக்கப்படுகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190