BSNL, ஜியோவிற்கே டஃப் கொடுக்கும் மூன்று புதிய திட்டங்கள்.. 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி..

|

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதன் போஸ்ட்பெய்ட் பிரிவின் கீழ் ரூ. 199, ரூ. 798 மற்றும் ரூ. 999 என்ற மூன்று போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும் திட்டங்கள் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டிகளை உண்டாக்கும் போல் தெரிகிறது.

ஜியோவிற்கு டஃப் கொடுக்க BSNL புதிய மூன்று திட்டங்கள்

ஜியோவிற்கு டஃப் கொடுக்க BSNL புதிய மூன்று திட்டங்கள்

ஏனெனில் இந்த மூன்று திட்டங்களும் இப்போது நாடு முழுவதும் கிடைக்கும் படி BSNL செய்துள்ளது. இந்த திட்டங்களின் கிடைக்கும் தன்மை தற்பொழுது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களில் செயல்பாட்டிலிருந்த ரூ. 99, ரூ. 225, ரூ. 325, ரூ. 799 மற்றும் ரூ.1,125 திட்டங்களைப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்திற்கு போட்டியாக

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்திற்கு போட்டியாக

ஏனெனில், டெலிகாம் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோவிற்கு டஃப் கொடுக்க BSNL நிறுவனத்தின் இந்த மூன்று திட்டங்களே போதுமானது என்று நிறுவனம் கருதுகிறது. ஜியோவிடம் போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் ரூ.399 முதல் தொடங்குகின்றது. இருப்பினும், அடிப்படை திட்டத்தின் விலை ரூ.199 மட்டுமே. எனவே ஜியோவை தேர்வு செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் இப்போது BSNL திட்டங்களைக் கருத்தில் கொள்வார்கள்.

எஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி? இனி Login செய்யாமலே இருப்புத் தொகை, பாஸ் புத்தகத்தை சரிபார்க்கலாம்எஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி? இனி Login செய்யாமலே இருப்புத் தொகை, பாஸ் புத்தகத்தை சரிபார்க்கலாம்

பிஎஸ்என்எல் ரூ.199 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.199 திட்டம்

இந்த புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன், BSNL நிறுவனம் டேட்டா ரோல்ஓவர் வசதியையும், பேமிலி ஆட் ஆன்-வசதியையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல் ரூ.199 திட்டமானது 75 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி கொண்ட 25 ஜிபி டேட்டா நன்மை, எம்டிஎன்எல் நெட்வொர்க் உட்பட வரம்பற்ற ஆன்-நெட் குரல் அழைப்பு, 300 ஆஃப்-நெட் நிமிடங்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

BSNL ரூ.798 திட்டம்

BSNL ரூ.798 திட்டம்

BSNL ரூ.798 போஸ்ட்பெய்ட் திட்டம் 150 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி உடன் 50 ஜிபி டேட்டா நன்மை, அனைத்து நெட்வொர்க்கு வரம்பற்ற வாய்ஸ் கால், மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு பேமிலி ஆட் ஆன் இணைப்பையும் வழங்குகிறது.

BSNL ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்டம்

BSNL ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்டம்

BSNL ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்டமானது 75 ஜிபி டேட்டா அளவிலான டேட்டா, 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி, அனைத்து நெட்வொர்க்கு வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் மூன்று பேமிலி ஆட் ஆன் இணைப்பு வசதியையும் தனித்தனியாக வழங்குகிறது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இப்பொழுது விஷயம் உங்களுக்கே புரிந்திருக்கும், மற்ற நெட்வொர்க்குகளை விட BSNL அதிக நன்மையை வழங்குகிறது என்பது இந்த திட்டங்களை பார்த்ததும் நமக்கேதெளிவாகத் தெரிகிறது.

குறிப்பு:ரூ.99, ரூ.225, ரூ.325, ரூ.799 மற்றும் ரூ.1125 போன்ற திட்டங்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் மட்டும் நிறுவனத்திடமிருந்து கூடுதல் அறிவிப்பு வரும் வரை அதே திட்டத்தில் இருக்குமாறு அறிவுரைக்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio vs BSNL Postpaid Plans Rs 199, Rs 798 and Rs 999 Now Obtainable In All Circles : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X