Airtel-ஐ ஓரங்கட்டிய Jio.. அம்பானி ஒரே போடு.. ரூ.198-க்கு மொத்தமா தூக்கியாச்சு.. 56 மில்லியனுக்கு இழுத்தாச்சு!
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தை தூக்கி சாப்பிடும்படியான சம்பவத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் செய்துள்ளது. ரூ.198 முதலான அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்கள் மூலம் 35 மில்லியன் டெலிகாம் கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இதனால் டெலிகாம் (Telecom) கஸ்டமர்களுக்கு என்ன நன்மை இருக்கிறது? ஜியோ நிறுவனம் எதில் ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய டெலிகாம் மார்கெட்டில் எந்த நிறுவனம் அதிக 5ஜி கஸ்டமர்களை வைத்திருக்கிறது என்பதிலேயே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. இதற்கு மலிவான விலை மட்டும் கிடையாது, டேட்டா வரம்புகள் (Data Caps) இல்லாததே முக்கிய காரணமாக இருக்கிறது. முதலில் எண்ணிக்கையை தெரிந்து கொள்வோம்.

ஜியோ Vs ஏர்டெல் 5ஜி சந்தாதாரர்கள் (Jio Vs Airtel 5G Subscribers): 2025ஆம் ஆண்டின் காலாண்டு கணக்கின்படி 191 மில்லியன் (19.1 கோடி) 5ஜி சந்தாதார்கள் ஜியோவை பயன்படுத்தி இருகிறார்கள். அதே காலாண்டு கணக்கின்படி 135 மில்லியன் (13.5 கோடி) 5ஜி சந்தாதார்கள் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி இருகிறார்கள். ஆகவே, 5.6 கோடி சந்தாதார்களை கூடுதலாக ஜியோ கொண்டிருக்கிறது.
இந்த கோடிக்கணக்கான சந்தாதார்கள் குறுகிய ஆண்டுகளில் 5ஜி சேவையை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆகவே, அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவில் இருக்கும் முக்கால்வாசி டெலிகாம் சர்க்கிள்களில் 5ஜி சேவை கிடைக்கிறது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களும் படிப்படியாக 5ஜி சேவையை அதிகரித்துவருகிறது.
ரீசார்ஜ் திட்டங்கள் எப்படி? ஜியோ நிறுவனத்தில் ரூ.198 மதிப்பிலான திட்டத்திலேயே அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. ஆனால், இதில் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது, இந்த நாட்களில் 5ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வருகிறது.
அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெறும் கஸ்டமர்கள், அந்த திட்டத்தின் டேட்டா இல்லாமல், இலவசமாகவே இந்த 5ஜி டேட்டாவை பயன்படுத்த கிடைக்கும். அதுவும் டேட்டா வரம்புகள் இல்லாமல்.
அதாவது, ஒரு நாளுக்கு அதிகபட்சம் இவ்வளவு டேட்டா மட்டுமே அன்லிமிடெட் சலுகையின் கீழ் கிடைக்கும் என்று எந்த வரம்பும் இந்த திட்டத்தில் இல்லை. இதில் மட்டுமல்ல, ஜியோவில் கிடைக்கும் ஒட்டுமொத்த 5ஜி டேட்டா திட்டங்களுக்கும் டேட்டா வரம்புகள் கிடையாது. ஆனால், ஏர்டெல் நிறுவனத்தில் அப்படி கிடையாது. அன்லிமிடெட் சலுகையில் டேட்டா வரம்பு இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற வேண்டுமானால், ரூ 398 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்துக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இந்த விலை அதிகமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப சலுகைகள் இதில் இருக்கிறது. அதாவது, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி சலுகைகளையும் கொடுக்கிறது. இதிலும் 2 ஜிபி டேட்டா தினமும் வருகிறது.
அன்லிமிடெட் வாய்ஸ், 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இதிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை கிடைக்கும். ஆனால், ஒரு நாளுக்கு அதிகபட்சம் 300 ஜிபி டேட்டாவை மட்டுமே இந்த 5ஜி சேவையில் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் டேட்டா வவுச்சர்கள் தேவைப்படும். இதனாலேயே ஜியோ நிறுவனம் ஏர்டெல்லை முந்துகிறது.


Click it and Unblock the Notifications








