Home
News

4ஜி யுத்தம் : ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல்..! எது சிறந்தது..?

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோ கட்டண திட்டங்களின் தரவு அளவு, குரல் அழைப்புகள் நிமிடங்கள், மற்றும் எஸ்எம்எஸ் எண்ணிக்கை உட்பட முழு விவரங்களும் கிடைக்கப்பெற, ஏர்டெல்-வோடாபோன் நிறுவன சேவைகளுடன் ஒப்பிடும்போது எது சிறந்தது என்பதை பற்றிய தொகுப்பே இது.

பார்தி ஏர்டெல், வோடபோன் போன்ற ரிலையன்ஸ் ஜியோ போட்டியாளர்கள் கடந்த சில நாட்களில் ஒரு பெரிய வித்தியாசத்தில் கட்டண விகிதத்தை குறைத்துள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ :

ரிலையன்ஸ் ஜியோ :

ரூ.50 /-ல் தொடங்கும் ஜியோ கட்டணங்கள் 10ஜிபி வரையிலான 1 மாத கால 4ஜி தரவை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனமோ ரூ.249/-க்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவை தான் வழங்குகிறது. வோடாபோனோ ரூ.252/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குகிறது.

ஏர்டெல் 1 வருட திட்டங்கள் :

ஏர்டெல் 1 வருட திட்டங்கள் :

ட்ராய் கட்டுப்பாடுகளுக்கு பின்னர் சமீபத்தில், ஏர்டெல் ஓராண்டு தரவு ரீசார்ஜ் சம்பந்தமான புதிய திட்டங்களை வழங்கவுள்ளதாக அறிவித்தது. அதன் மூலம் ஏர்டெல் ப்ரீபெய்டு பயனர்கள் ரூ.1,498 ரீசார்ஜ் செய்ய 1ஜிபி அளவிலான 4ஜி தரவை அனுபவிக்க முடியும். அதாவது மாத்திற்க்கு ரூ.51/- என்ற விலையில் ..!

ரிலையன்ஸ் ஜியோவின் 60ஜிபி :

ரிலையன்ஸ் ஜியோவின் 60ஜிபி :

ரிலையன்ஸ் ஜியோ சேவையானது ரூ.400/-ல் 60ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குகிறது. இது நிஜமாகவே மக்களுக்கு மிகப்பெரிய சலுகையாகும். இந்த சலுகை 30 நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் 20ஜிபி :

ஏர்டெல் 20ஜிபி :

ரிலையன்ஸ் ஜியோவின் முக்கிய போட்டியாளராக திகழும் ஏர்டெல் மாதத்திற்கு 20ஜிபி அளவிலான தரவை தான் அதிகபட்சமாக வழங்குகிறது மற்றும் அது ரூ 1,989 கட்டணம் கொண்டுள்ளது. இதை பொருத்தமட்டில் ரிலையன்ஸ் ஜியோ தான் தெளிவான வெற்றியாளர் ஆகிறது.

ஏர்டெல் மற்றும் வோடாபோனில் :

ஏர்டெல் மற்றும் வோடாபோனில் :

ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகளில் நீங்கள் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களை பெற இயலாது. ரிலையன்ஸ் ஜியோவில் நீங்கள் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் உட்பட முழு மாதம் இலவச தொகுப்பு கிடைக்கும், ஆனால் ஏர்டெல் மற்றும் வோடாபோனில் தனித்தனியாக குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.

வெற்றி :

வெற்றி :

இந்த ஒப்பீட்டில் வெற்றி பெறுவது யார் என்பதை கண்டுபிடிப்பது மிக எளிது. ரிலையன்ஸ் ஜியோ தெளிவான வெற்றியை பெறுகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

எது சிறந்தது.? ஜியோ ஜிகாபைபர் அல்லது பிஎஸ்என்எல் பிபிஜி1199..?

Best Mobiles in India

English summary
Reliance Jio vs Airtel 4G: Tariff Plans Compared. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X