Home
News

ரூ.300-க்கு கீழ் இருந்தாலே போதும்., தினசரி 1 ஜிபி டேட்டா பிளான்- ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களே!

ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் மிக பிரதான தொலைத் தொடர்பு நிறுவனமாகும். இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறித்து பார்க்கையில் அது ஜியோ, விஐ, ஏர்டெல் ஆகும். இதில் விஜ, ஏர்டெல்லை விட ஜியோ குறைந்த விலையில் சிறந்த நன்மைகளை வழங்கி முன்னணியில் இருக்கிறது. ஜியோ அறிமுகமான குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பல்வேறு விலையில் திட்டங்கள் வழங்கினாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்பும் திட்டம் பட்ஜெட் விலையில் தான் இருக்கிறது. மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரூ.300-க்கு கீழ் வழங்கும் தினசரி 1 ஜிபி டேட்டா திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஜியோ, ஏர்டெல், விஐ

ஜியோ, ஏர்டெல், விஐ

இந்தியாவின் மூன்று முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது ஜியோ, ஏர்டெல், விஐ ஆகும். இவை பயனர்களுக்கு ஏராளமான திட்டங்களை பல்வேறு விலைப்பிரிவில் ஏணைய சலுகைகளோடு வழங்கி வருகிறது. பிரபலமான ப்ரீபெயட் திட்டம் குறித்து பார்க்கையில் அது தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்படும் தினசரி டேட்டா பேக்குகள் ஆகும். விலைக்கு ஏற்ப தினசரி டேட்டா லிமிட், வேலிடிட்டி உள்ளிட்ட பிற நன்மைகள் வழங்கப்படுகிறது. ஜியோ, ஏர்டெல், விஐ வழங்கும் ரூ.300-க்கு கீழ் வழங்கும் தினசரி 1 ஜிபி டேட்டா திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் மிக பிரதான முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாகும். சேவை மற்றும் நன்மைகள் குறித்து பார்க்கையில் பிற இரண்டு நிறுவனங்களை விட ஜியோ சிறந்த நன்மைகளையே வழங்குகிறது. ஜியோ தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ஜியோவின் முதல் திட்டம் ரூ.149 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் 20 நாட்கள் வேலிடிட்டியோடு தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் வரம்பற்ர குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை பெறலாம்.

தினசரி 1 ஜிபி டேட்டா

தினசரி 1 ஜிபி டேட்டா

ரூ.179 விலையில் பயனர்கள் 24 நாட்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்கும் மற்றொரு பேக் ஆகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை தினசரி வழங்குகிறது. பட்டியலில் உள்ள கடைசி திட்டமானது ரூ.209 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் பயனர்களுக்கு ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பிற ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதி ஏர்டெல்

பாரதி ஏர்டெல்

பாரதி ஏர்டெல் தற்போது தனது சேவைகளை மேம்படுத்தி சலுகைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் இரண்டாவது வெற்றிகரமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக ஏர்டெல் உருவெடுத்து இருக்கிறது. ரூ.209 விலையில் கிடைக்கும் திட்டம் குறித்து பார்க்கையில், இது 21 நாட்கள் வேலிடிட்டியோடு தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

தினசரி 1 ஜிபி டேட்டா 24 நாட்கள் வேலிடிட்டி

தினசரி 1 ஜிபி டேட்டா 24 நாட்கள் வேலிடிட்டி

அடுத்த திட்டம் ரூ.239 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டாவை 24 நாட்களுக்கு வழங்குகிறது. அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. பட்டியலில் கடைசி திட்டமாக இருப்பது ரூ.265 விலையில் கிடைக்கும் திட்டமாகும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், இந்த செல்லுபடியாகும் காலத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா வரம்பற்ற குரல் அழைப்புகல் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட திட்டங்கள் அனைத்தும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு மற்றும் விங்க் மியூசிக் அணுகலை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா (விஐ) சிறந்த வளர்ச்சி

வோடபோன் ஐடியா (விஐ) சிறந்த வளர்ச்சி

வோடபோன் ஐடியா (விஐ) சிறந்த வளர்ச்சியைடையும் நிறுவனமாகும். பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் 4ஜி சேவைகளை கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. விஐ வழங்கும் முதல் திட்டம் ரூ.199 விலையில் 18 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. அடுத்த திட்டம் ரூ.219 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் தினசரி 1 ஜிபி டேட்டாவை 21 நாட்கள் வேலிடிட்டியோடு வருகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

தினசரி 1 ஜிபி டேட்டா நன்மைகள்

தினசரி 1 ஜிபி டேட்டா நன்மைகள்

விஐ வழங்கும் மூன்றாவது திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா திட்டம் ஆகும். இந்த திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு தினசரி 1 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கடைசியாக இருப்பது ரூ.269 திட்டமாகும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.199, ரூ.219 மற்றும் ரூ.269 விலையில் விஐ மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio, VI, Airtel Offers Daily 1GB Data Plan at under Rs.300
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X