தினமும் 2 ஜிபி டேட்டா ! ஜியோவின் புதிய டிஜிட்டல் பேக்.!
இந்த புதிய ஆப்பர் ஏற்கனவே உள்ள திட்டத்தில் கூடுதலாக(Add-On) ,அதாவது ஏற்கனவே ரீசார்ஜ் செய்யப்பட்ட திட்டத்துடன் டாப்-அப் திட்டமாக இது தரப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்காக மற்றுமொரு சலுகையை அறிவித்துள்ளது. இந்த சமீபத்திய புதிய ஆப்பரில், தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது ஜியோ.

இந்த புதிய ஆப்பர் ஏற்கனவே உள்ள திட்டத்தில் கூடுதலாக(Add-On) ,அதாவது ஏற்கனவே ரீசார்ஜ் செய்யப்பட்ட திட்டத்துடன் டாப்-அப் திட்டமாக இது தரப்படும். இதன் மூலம் ஜியோ ப்ரீபெய்டு பயனர்களுக்கு, தங்களின் சமீபத்திய திட்டம் என்ன சலுகைகள் வழங்குகிறது என்பதை கருத்தில் கொள்ளாமல், தினமும் கண்டிப்பாக 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஆனாலும் இந்த ஆப்பரில் ஒரு சிக்கலும் இருக்கிறது. 'மை ஜியோ' செயலியில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, இந்த சலுகை ஜூலை 30 வரை மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் இது குறிப்பிட்ட சில ஜியோ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த ஆப்பரை பெற ஏற்கனவே ஜியோ ப்ரீபெய்டு சந்தாதாரராக இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் ஜியோ எண்ணில் ரிசார்ஜ் பேக் ஆக்டிவாக உள்ள வாடிக்கையாளர்களும் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த புதிய ஆப்பரை ஆக்டிவேட் செய்தபின்னர், பயனர்களுக்கு தற்போது அனுபவித்து வரும் பலன்களுடன் கூடுதலாக தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும்.
மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் 'மான்சூன் ஹங்காமா' என்னும் எக்சேன்ஜ் ஆப்பரை அறிவித்துள்ளது. இதன் படி முன்னதாக வழங்கப்பட்ட உயர்தர நவீன 'ஜியோ போன்' ஐ 'ஜியோ போன்2' ஆக மாற்றி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த புதிய சலுகையின் ஒரு பகுதியாக, ஜியோ போன் பயனர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக சிறப்பு ரீசார்ஜ் பலன்களை வழங்குகிறது ஜியோ. 'மான்சூன் ஹங்காமா' எக்ஸ்சேன்ஜ் ஆப்பரின் ஒரு பகுதியாக, பயனர்கள் ஜியோ போனை ரூ501 என்ற விலையில் வாங்க முடியும். பயனர்கள் இந்த பணத்தையும் 3 மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்பதால், ஜியோ போன் இலவசமாக கிடைக்க வழிவகுக்கிறது. இந்த சலுகையை பெற ஆர்வமாக உள்ளவர்கள் ரிலையன்ஸ் ஜியோ சில்லறை விற்பனை கடைகளில் தங்களின் எந்தவொரு பழைய 2ஜி/3ஜி அல்லது 4ஜி(non- VoLTE) போனையும் சுலபமாக எக்ஸ்சேன்ஜ் செய்து ஜியோ போனை பெற முடியும்.

ஆனாலும் வாடிக்கையாளர்கள் ரூ549 ரிலையன்ஸ் ஜியோ ரிசார்ஜ் திட்டத்தை வாங்கினால் மட்டுமே இந்த ஆப்பர் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications